ராஜஸ்தான் மாநிலத்தின் 5 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 24ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்-சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் அங்கு பா.ஜ.க. வேட்பாளர் சுக்பீர் சிங் ஜான்புரியாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 5 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ராஜஸ்தானின் ஐந்து மக்களவை தொகுதிகளில் போட்டியிடுவதற்கு இதுவரை 42 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் தற்போது உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் எம்.பி.யாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக