மாநில செயலாளர் அமீர் ஹம்சா, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, மாவட்ட தலைவர் ரஷீத், பொதுச் செயலாளர் ஏ.கே.கறீம், செயலாளர் கோபிநாத், தொகுதி தலைவர் கோல்டு ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி பேசியதாவது: இந்திய அரசியல் ஜனநாயகமானது, பணநாயகமாக மாறி வருகிறது. ஊழலும், முறைகேடுகளும் தலைவிரித்தாடுகிறது. ஒருசில முதலாளி வர்க்கங்களின் கை பொம்மையாக அவைகள் செயல்படுகின்றன.
அதற்காக, அடித்தட்டு மக்களும், விவசாயிகளும் விரட்டப்படுகின்றனர். நாட்டின் வளங்கள் அனைத்தும் தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது, இதுதான் நாடு சந்தித்து கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்து. எனவே, இதுபோன்ற நிலையை மாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியலிலும், அரசின் துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்ததற்கு காரணம் அக்கட்சியின் தனிப்பட்ட பலம் என்பது கிடையாது. மக்கள் அங்கு ஒரு மாற்றத்தைவிரும்பினார்கள்.
இன்றைக்கு தமிழக மக்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, வேட்பாளர் நிஜாம் முகைதீன், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ மகளிரணி மாநில செயலாளர் நபீஸா பேகம் ஆகியோர் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக