தனது தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகவிருப்பதாக உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஆஸம் கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக எனது பிரசாரத்துக்கு தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், அதே குற்றச்சாட்டுக்கு உள்ளான அமித் ஷாவுக்கு மட்டும் ஏன் தடையை விலக்கியுள்ளது? குஜராத்துக்குள் நுழைய உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியும், கொலைபாதகருமான ஒருவருக்கு பிரசாரம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், துளியும் களங்கமற்ற எனக்கு பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பேசும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றார் ஆஸம் கான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக