ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

பிராமணர்களின் எதிர்ப்பு: பா.ஜ.கவுக்கு உ.பியில் தலைவலி!

பாரதீய ஜனதா கட்சி ஒ.பி.சி கட்சியாக மாறிவிட்டதாக பிராமண தலைவர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு பா.ஜ.கவுக்கு உ.பியில் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் உள்ளிட்ட சமூகத்தினரை கட்சியில் நெருங்கவைக்க பா.ஜ.க நடத்தும் முயற்சிகள் பிராமணர்களை கொதிப்படைய வைத்துள்ளதாம்.

சில தினங்களுக்கு முன்பு வாரணாசியில் பா.ஜ.கவின் பிராமண எதிர்ப்பு நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் பிராமணர்களில் ஒரு பிரிவினர் பிராமண மகாசபா என்றதொரு அமைப்பை ஏற்படுத்தினர். 1990களில் பிராமணர்கள், பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு அளித்த நன்கொடைகளின் விவரம் மற்றும் தற்போதைய தலைவர்களின் பிராமணர்களோடு காட்டு நன்றிக்கெட்டத்தனம் ஆகியன நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்பட்டது.
லக்னோவில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு பிராமணர்களின் எதிர்ப்பு உள்ளது.முரளி மனோகர் ஜோஷி, கல்ராஜ் மிஷ்ரா, கேசரிநாத் திரிபாதி, லால்ஜி டாண்டன் உள்ளிட்ட தலைவர்களை ராஜ்நாத்சிங் ஒடுக்குவதாக பா.ஜ.கவில் உள்ள பிராமண தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்தேர்தலில் ராஜ்நாத் சிங் கடுமையான விலையை அளீக்கவேண்டிய நிலை வரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.அதேவேளையில் ஜகதாம்பிகா பால் போன்ற தாக்கூர் சாதியினருக்கு சீட் கொடுத்ததும் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை பிராமணர்கள் எதிர்க்க காரணமாகும்.ஷியா தலைவர்களை ராஜ்நாத் சிங் சந்தித்ததும் பிராமணர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயின் பெயரைக் கூறி ராஜ்நாத் சிங் இங்கு வாக்கு சேகரித்து வருகிறார்.தனக்காக சீட்டை விட்டுக்கொடுத்த லால்ஜி தாண்டனை பகைக்காமல் இருக்க தான் கலந்துகொள்ளும் பிரச்சார நிகழ்ச்சிகளில் அவரையும் ராஜ்நாத்சிங் அழைத்து வருகிறார்.ஆனால், முஸ்லிம் வாக்குகள் தீர்மானிக்கும் தொகுதியான லக்னோவில் தீவிர ஹிந்துத்துவத்தை குறித்து பேசவும் ராஜ்நாத் சிங்கால் முடியவில்லை.பா.ஜ.கவின் இந்த நெருக்கடியை தனக்கு சாதகமாக்க மாயாவதி முயற்சி நடத்துகிறார்.பா.ஜ.கவின் பிராமண எதிர்ப்பு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி அவர்களுடைய வாக்குகளை கவரும் வகையில் பிராமணர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் பகுஜன் சமாஜ்கட்சி பிரச்சாரம் நடத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக