மும்பை அணியைச் சேர்ந்த ஹசி- டாரே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஹசி 16 ரன்னிலும், டாரே 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ராயுடு நிதானமாக விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதனால் மும்பை அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது.சர்மா (2). பொல்லார்டு (3), கோரி ஆண்டர்சன் (18), ஹர்பஜன் சிங் (8), ஜாகீர்கான் (0), மலிங்கா (2) ரன்களில் அவுட் ஆனார்கள். ராயுடு ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 35 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணி தரப்பில் ஸ்டார்க், வருண் ஆரோன், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
பின்னர் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. ஆனால் அந்த அணி தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.தொடக்க வீரர் மாட்டின்சன் 12 ரன்னிலும், கோலி மற்றும் யுவராஜ் ஆகியோர் டக் அவுட்டிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதனால் பெங்களூர் அணி 3.5 ஓவரில் 17 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.
4-வது விக்கெட்டுக்கு பார்த்தீப் பட்டேல்- டி வில்லியரஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் விக்கெட் இழக்காமலும் அதே சமயம் ரன் அடித்தும் விளையாடினர். இதனால் ரன் விகிதம் மெதுவாக உயர்ந்தது.10 ஓவருக்குப்பின் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் பெங்களூர் அணி 17.3 ஓவரிலேயே 116 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பார்த்தீவ் பட்டேல் 57 ரன்னுடனும், டி வில்லியர்ஸ் 45 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ஜாகீர்கான் 2 விக்கெட்டும், மலிங்கா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக