வியாழன், ஏப்ரல் 24, 2014

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 35.28 சதவிகித வாக்குப்பதிவு: பிரவீண்குமார்

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 35.28 சதவிகித வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் கூறியுள்ளார். அதிகபட்சமாக ஆரணி மக்களவை தொகுதியில் 41 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 25.4 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. 
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பதிவான சதவிகித விவரம்:-

திருவள்ளூர்-34.4, வடசென்னை-27.4, தென்சென்னை-26.3, மத்திய சென்னை-25.4, ஸ்ரீ பெரும்புதூர்-30.6, காஞ்சிபுரம்-36.4, அரக்கோணம்-37.8, வேலூர்-34.3, கிருஷ்ணகிரி-38.9, தர்மபுரி-42.9 திருவண்ணாமலை-39.1, ஆரணி-41, விழுப்புரம்-37.1, கள்ளக்குறிச்சி-38.7, சேலம்-34.92, நாமக்கல், ஈரோடு-37.8, திருப்பூர்-35.8, நீலகிரி-32.3, கோவை-32.7 பொள்ளாச்சி-33.4, திண்டுக்கல்-39.8, கரூர்-39.6, திருச்சி-34.6, பெரம்பலூர்-39, கடலூர்-38, சிதம்பரம்-37.6, மயிலாடுதுறை-34.5, நாகப்பட்டினம்-37.3, தஞ்சை-39.5 

சிவகங்கை-36.3, மதுரை-31, தேனி, விருதுநகர்-36.9, ராமநாதபுரம்-33.37, தூத்துக்குடி-33.28, தென்காசி-35.68, திருநெல்வேலி-33.6, கன்னியாக்குமரி-31 சதவிகித வாக்குகள் பதிவாகின. இடைத்தேர்தல் நடைபெறும் ஆலந்தூரில் 27 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக