சனி, டிசம்பர் 31, 2011

அஹமதாபாத் குண்டுவெடிப்பில் முஸ்லிம் இளைஞர் கைது !

புதுடெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி மெளலானா ஹபீஃப் ஃபலாஹி என்ற 26 வயது முஸ்லிம் இளைஞர் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்துள்ளனர்.வட இந்தியாவை பொருத்தவரை

மதுரையில் எம்.பி. அலுவலகத்தை மு.க.அழகிரி காலி செய்தார்: மாநகராட்சியிடம் சாவி ஒப்படைப்பு


மதுரையில் எம்.பி. அலுவலகத்தை 
 
 மு.க.அழகிரி காலி செய்தார்:
 
 மாநகராட்சியிடம் சாவி ஒப்படைப்புமதுரை மேலமாரட் வீதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் தரை தளத்தில் சுமார் 2 ஆயிரம் சதுரஅடி பரப்பில் உள்ள கட்டிடத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் எம்.பி. அலுவலகம் கடந்த 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. மேயராக ராஜன்செல்லப்பா பதவி யேற்றார். கடந்த மாதம்

தானே புயல் சேதங்கள்: கடலூரில் ஜனவரி 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை


தானே புயல் சேதங்கள்: கடலூரில் ஜனவரி 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறைகடலூர்-புதுச்சேரி அருகே நேற்று கரையை கடந்த தானே புயலின் கோர தாண்டவத்தால் கடலூர், புதுச்சேரி பகுதியில் பலர் வீடுகளை இழந்தனர். மீனவர்கள் மீன்வலைகள், படகுகளை இழந்தனர். கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்டுள்ள இழப்புகள், சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா

தானே புயலின்135 கி. மீ. வேகம் (வீடியோ இணைப்பு உள்ளே)


athirchiபுதுச்சேரி – கடலூர் இடையே காலை 7 மணி அளவில் தானே புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும்போது 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி வரியாக நிலப்பரப்புக்குள் நுழைந்த புயல் திருவண்ணாமலை வழியாக சென்றது. திருவண்ணாமலை, தருமபுரியிலும் புயலால் இன்று முழுவதும் பலத்த மழை நீடித்தது. வேகம் குறையாத புயலால் பல இடங்களில்

புற்றுநோயை பரப்புகின்றதாக அமெரிக்கா ?: சாவிஸ் குற்றச்சாட்


அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகின்றதா என தான் சந்தேகம் கொண்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவிர

‘ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி

ross-caputi
லண்டன்:ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது. அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை

நைஜீரியா:சர்ச்சுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம்

டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி
தோஹா:நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார். கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள உமர்பின் கத்தாப் மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது: நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட

ஊடகவியலாளர் கைது: இஸ்ரேலிய அடாவடி


கடந்த புதன்கிழமை (28.12.2011)  வழமைபோல் பணிமுடிந்து தன்னுடைய இருப்பிடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார், பிரபல ஊடகவியலாளரான அமீன் அபூ வர்தா.
நப்லஸ் நகரின் பலடா அகதி முகாமில் அவரது வீடு அமைந்திருந்தது. வீட்டு வாயிலை அவரால் நெருங்க முடியாதபடி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அகதி முகாமைச் சுற்றிவளைத்திருந்தது. எங்கும் பரபரப்பு. அமீன் அபூ வர்தா ஆக்கிரமிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு

காஸா மீது இஸ்ரேலியப் போர் விமானத் தாக்குதல்


கடந்த வியாழக்கிழமை (29.12.2011) காஸாவின் மத்திய மற்றும் வடக்குப் பிராந்தியங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இத்தாக்குதலினால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எவையும் இடம்பெற்றதாக இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.
பெய்ட் லஹியாவின் அமெரிக்கன் பள்ளி அருகில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் மூன்று ஏவுகணைகளை எறிந்துவிட்டுச் சென்றதாக

2011 இல் 21 சிறுவர்கள் உட்பட 180 பலஸ்தீனர்கள் படுகொலை!


கடந்த புதன்கிழமை (28.12.2011) பலஸ்தீன் விடுதலை அமைப்பான பீ.எல்.ஓ. வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் 21 சிறுவர்கள் உட்பட 180 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு, சுமார் 3300 பேர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதே வருடத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் ஆக்கிரமிக்கப்பட்ட

தானே புயலில் சிக்கிய தென்கொரிய கப்பல்: சென்னையில் தரை தட்டியது!


நேற்று சென்னை மற்றும் கடலூரைத் தாக்கிய தானே புயலில் தென் கொரிய கப்பலொன்று சிக்கி சென்னையில் தரை தட்டி நின்றது.
தமிழகத்தைத் தாக்கிய தானே புயல் அபாயம் காரணமாக, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் உள்ள கப்பல்களை நடுக்கடலில் பத்திரமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சென்னை துறைமுகத்தில் நின்ற 20 சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக நங்கூரம் பாய்ச்சி

2011ல் திஹாருக்கு தினுசு தினுசாக 'விசிட்' அடித்த விஐபி கைதிகள்!

உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும், அதுபோல தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பார்கள். பத்துரூபாய் திருடியவன் மாட்டிக்கொண்டு அடிபட்டு, சிறைக்கு செல்வதுதான் வாடிக்கையாக இருக்கிறது. ஆனால் கோடி கோடியாக கொள்ளை அடித்தவர்கள், ஜாலியாக ஊர்வலம் வருகின்றனர். இது சட்டம், நீதித்துறையின் மீது சாதாரண மக்களுக்கு ஒரு

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அனல்மின் நிலையம் ரூ.20 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது

கல்பாக்கம், டிச.31-காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தமிழ்நாட்டி லேயே மிகப்பெரிய அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகத்தின் மேற் பார்வை பொறியாளர் (திட்டம்) கணபதி சங்கரன் தெரிவித்தார்.

புதிதாக அமைய வுள்ள அனல்மின் நிலைய பணிகள் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் செய் யூரில் நடைபெற்றது.