வியாழன், டிசம்பர் 22, 2011

இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வளரும் நாடுகள்

The United Nations Security Council
ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் புதிய குடியிருப்புகளை கட்ட அனுமதி அளித்துள்ள இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், இந்தியா உள்பட வளரும் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.ஃபலஸ்தீன் உடனான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்க இஸ்ரேல் முயல்வதாக பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, போர்சுகல் ஆகிய நாடுகள்
கருத்து தெரிவித்துள்ளன.
கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட ஃபலஸ்தீன் பகுதிகளில் சட்ட விரோதமாக குடியிருப்புகளை கட்டுவோம் என்ற இஸ்ரேலின் பிரகடனம் ஆபத்தான செய்தியாகும். இஸ்ரேல் உடனடியாக குடியிருப்புகளை கட்டுவதை நிறுத்தவேண்டும். குடியிருப்பு வாசிகள் ஃபலஸ்தீனர்கள் மீது நடத்தும் தாக்குதலையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்நாடுகள் கூறியுள்ளன.
இஸ்ரேலின் அத்துமீறல்களை அமெரிக்கா காணாததுபோல் நடிப்பதாக ரஷ்யாவின் தூதர் விட்டலி சுர்கின் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவதுதான் பிராந்தியத்தில் பிரச்சனைக்கு காரணம் என இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக