வெள்ளி, டிசம்பர் 23, 2011

சிரியாவில் கலவரம் நீடிப்பு ராணுவம் குண்டு வீச்சில் 100 பேர் பலி


பெய்ரூட், டிச.23- சிரியாவில் அதிபர் பஷீர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட துப் பாக்கி சூட்டில் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியா னார்கள். ராணுவ தரப்பில் 1,100 பேர் பலியாகி இருப்பதாக அரசு கூறுகிறது.கடந்த 2 நாள்களில் மட்டும் ராணுவம் சுட்டதில் 250 பேர் உயிர் இழந்ததாக சிரியா தேசிய கவுன்சில் தெரிவித்தது.
இதற்கிடையில் துருக்கி எல்லையோரம் இருக்கும் கபார் ஒவைட் என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களிலும் போராட்டம் பரவியது. அங்கு போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது ராணுவத்தினர் ராக்கெட், டாங்கிகள் மூலம் குண்டு களை வீசியும், துப்பாக்கியாலும் சுட்டு தாக்கினர்.
இதில் 100 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். ஆனால் இந்த தகவல் பற்றி சிரியா அரசு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக