சனி, மார்ச் 15, 2014

தொகுதி கண்ணோட்டம் : சிதம்பரம் (தனி)

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இது கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பரந்து விரிந்து காணப்படுகிறது.


உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள் ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பம்சங்களாகும்.
1957–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது இத்தொகுதி இரட்டை உறுப்பினர்களை கொண்ட தொகுதியாக இருந்தது. 2004–ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை இத்தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்(தனி), மங்களூர்(தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.


2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது மங்களூர்(தற்போதைய திட்டக்குடி தொகுதி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகள் பிரிக்கப்பட்டு கடலூர் பாராளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.  அவற்றுக்கு பதிலாக அரியலூர் மாவட்டத்தைச்சேர்ந்த அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் தொகுதியும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியுடன் சேர்க்கப்பட்டது..
இதனால் இப்போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில்(தனி) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயங்கொண்டம், அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன.

இதுவரை நடந்த 14 பாராளுமன்ற தேர்தல்களில் இத்தொகுதியில் காங்கிரஸ்தான் அதிக தடவை(5) வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் தி.மு.க. 4 தடவையும், பா.ம.க. 3 தடவையும் அ.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு தடவையும் வென்றுள்ளன.
2009 தேர்தலில்....
2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற ஓட்டுகள் வருமாறு:–

மொத்த ஓட்டுகள்           –11,19,182
தொல்.திருமாவளவன் (வி.சி.க.வெற்றி)
–4,28,804
பொன்னுசாமி(பா.ம.க.)       –3,29,721
சபா.சசிக்குமார்(தே.மு.தி.க.)     –66,283
வி.மணிகண்டன்(சுயே.)–9,799
வி.மருதமுத்து(சுயே.)–8,367
என்.கவியரசன்(சுயே.)–6,173
என்.ஆர்.ராஜேந்திரன்
(பகுஜன் சமாஜ்கட்சி)–5,718
வாக்காளர்கள் எண்ணிக்கை
இந்த பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 33 ஆயிரத்து 823 ஆகும். இதில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 434 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 62 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்களும், 13 திருநங்கைகளும் அடங்குவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக