ஞாயிறு, மார்ச் 30, 2014

ஆந்திராவில் இன்று உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

ஆந்திராவில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 10 மாநகராட்சிகள், 145 நகராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தெலுங்கானா பகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. சீமாந்திரா பகுதியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. விரைவில் சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் தேர்தல் வர இருப்பதால் அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சி தேர்தல் கருதப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிக ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பதட்டமான தொகுதிகளில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 101 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக