பீஜிங்: "வரும் 8ம் தேதி, டில்லியில் சீனா, இந்தியா இடையே, பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும்' என, சீனா தெரிவித்துள்ளது.எல்லைப் பிரச்னைகள், படைகள் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, கடந்த நவம்பர் 28,29 தேதிகளில், சீனா, இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டில்லியில் நடந்த சர்வதேச புத்த மாநாட்டில், தலாய்லாமா
கலந்து கொள்ள, இந்தியா அனுமதிக்கக் கூடாது என சீனா தெரிவித்திருந்தது.
ஆனால், அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. எனினும், அம்மாநாட்டில் இந்திய உயர் அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. கோல்கட்டாவில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், தலாய்லாமாவுடன் அம்மாநில கவர்னர் எம்.கே.நாராயணன் கலந்து கொண்டார்.இதனால் எரிச்சல் அடைந்த சீனா, பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளைத் தள்ளிப் போட்டது. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ, நேற்று அளித்த பேட்டியில், "டில்லியில், வரும் 8ம் தேதி, இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கும். அதில், சீனா சார்பில், ராணுவ உயர் அதிகாரி மா ஷியாவோடியான் கலந்து கொள்ள உள்ளார்' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக