தமிழ் பேசும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் சமூகத்தினருக்கு 1990 ஆண்டு ஒக்டோபர் என்பது மறக்கமுடியாத ஆண்டாகும். முஸ்லிம்களின் பாரம்பரிய தாயக பிரதேசங்களான வடகிழக்கிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு
பல பயங்கர படுகொலைகளை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகளால் செய்யப்பட்ட ஆண்டாகும்.கிழக்கே காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள் ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஐம்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் சென்ற புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றது. புலித்தலமையின் நேரடி உத்தரவின்பேரில் இந்தக்கொடூரம் அரங்கேறியது. இது 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி இந்தக்கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
சரியாக ஒருகிழமைக்கு பின்னர் அதாவது அதே வருடம் ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் பிச்சிநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர். ஏறாவூர் மட்டக்கிழப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டகிழப்பு – பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் சென்ற புலிபயங்கரவாதிகள் நடத்திய ஈனத்தனமான இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள் 28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது, இங்கு பெண்களும் சிறுவர்களும் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இச்சம்பவம் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் கிழக்கில் அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லீம் கிராமம் ஒன்றுக்குள் புகுந்த புலிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் ஆகஸ்ட் 13திகதி நடைபெற்றது. அம்பாறை முள்ளியன் காடு என்ற கிராமத்தில் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வயலில் வேலைசெய்துகொண்டிருந்து 17 முஸ்லிம்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். மறுநாள் ஆறாந்திகதியும் அம்பாறை வயல்வெளியொன்றில் வைத்து 33 முஸ்லீம் விவசாயிகள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேவருடம் ஜூலை மாதம் முப்பதாந்திகதி புலிகளால் அக்கரைப்பற்று நகரத்தில் 14 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு மட்டும் சும்மார் ஐந்நூற்றுக்கு மேட்பட்ட முஸ்லீம்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர் 1990 க்கு முன்னரும் பின்னரும் பல ஆயிரம் முஸ்லிம்கள் புலிகளால் கொல்லபட்டனர் . இது கிழக்கில் மட்டும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
அதேவருடம் வடமாகாணத்தின் யாழப்பாணம் முல்லைதீவு வவுனியா மன்னார் கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சும்மார் ஒரு இலச்சதுகும் அதிகமான முஸ்லீம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கைக்கு முன்னர் வடக்கில் இஸ்லாமிய துடிப்புள்ள பல வாலிபர்கள் புலிகளால் கடத்தபட்டனர் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் பல முஸ்லிம் வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் , கடத்தப்பட்டு கானாமல் போனார்கள் இதன் பின்னர் அக்டோபர் மாதம் 22ஆம்திகதி வட புல முஸ்லிம்கள் . உடமைகள் எல்லாம் அபகரிகப்பட்டு தமது தாய் மண்ணை விட்டு வெறும்கையோடு விரட்டப்பட்டனர். யாழ்பாண முஸ்லீம் மக்ளுக்கு வெறும் இரண்டு மணித்தியால அவகாசமே வழங்கப்படது. ஏனைய மாவட்ட முஸ்லீம்களுக்கு ஒரு நாள் தொடக்கம் 48மணித்தியால் அவகாசம் வழங்கப்பட்டது.
யாழ்பாண முஸ்லீம் மக்களை விரட்டி வெளியேற்றும் நோக்கோடு 35 முஸ்லீம் வர்தகர்களை புலிப்பயங்கரவாதிகள் கடத்திசென்றனர். இவர்களில் புலிகளுக்கு இலச்சக்கணக்கில் கப்பம் வழங்கிய 18 முஸ்லீம் வர்தகர்கள் சிலமாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் சித்திரவதை செய்து கொல்லபட்டனர் சித்திரவதை செய்து கொல்லபட்டவர்களில் “கெளுறு” என்ற பிரபல வர்தகர் மிக வயதானவர் இவர் தலை கீழாக கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டார் ஏணையோர் பற்றிய தகவல்கள் கொல்லபட்டனர் என்பதை தவிர வேரு எதுவும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. வடமாகாண அன்றைய மொத்த சனத்தொகையில் ஐந்து சதவீதமாக இருந்த முஸ்லீம் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழைத்தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.விரட்டப்பட்டமை ஓர் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும்.
புலிப்பயங்கரவாதிகள் என்னென்ன எந்தவகையான பயங்கரவாத செயல்களை செய்தாலும் அவைகள் எல்லாம் தமிழீழ போராட்டமாகும். அதனால்தான் தமிழீழ போராட்டத்தை உலகம் ஒரு பயங்கரவாத போராட்டமாக அங்கீகரித்துள்ளது.
ஒருபாரிய கொடுரத்துக்கு வடக்கு-கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் முகம்கொடுத்து பத்தொன்பது வருடங்கள் ஓடிவிட்டன. வடக்கை விட்டு விரட்டப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் பதினேழு பாரிய அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மன்னாரிலிருந்து விரட்டப்பட்டு புத்தளம் அகதி முகாமில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம் அகதிகளின் அவலங்கள் சொல்லமுடியாதவைகள். கிழக்கு முஸ்லீம்கங்கள் பறிகொடுத்து விவசாயக்காணிகள் வாழ்நிலங்கள் மாட்டுப்பட்டிகள் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டவர்களின் கைகளிலேயே இன்னமும் இருக்கின்றன.
வடகிழக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீகளில் எண்பது சதவீதமானவர்கள் இன்னமும் தமது தாய் மண்ணுக்கு திரும்பவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக