வியாழன், டிசம்பர் 29, 2011

பா.ஜ.க.வின் உண்மை முகத்தை அறிந்துகொண்டேன்: சோனியா

 மக்களவையில் அரசியல் அமைப்புச் சட்ட திருத்த மசோதா தோல்வி யடைந்தது குறித்து பா.ஜ.க.மீது காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். பாஜகவின் உண்மை முகத்தை நேற்று நான் அறிந்துகொண்டேன் என்று சோனியா கடுமையாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக சோனியா கூறியுள்ளது:


லோக்பால் அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து தரும் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தருவதாக பா.ஜ.க. தெரிவித்திருந்தது. ஆனால் அந்த திருத்த மசோதா மக்களவையில் வந்தபோது அவர்கள் உண்மை முகத்தைக் காட்டிவிட்டனர். 

லோக்பாலுக்குத் தேவையான அதிகாரத்தை காங்கிரஸ் அளித்தது, ஆனால் அது வேண்டாம் என்ற காரணத்தால்தான் பா.ஜ.க.வினர் அதற்கு எதிராக வாக்களித்துவிட்டனர் என்றார் அவர்.

சோனியாவைத் தொடர்ந்து ராகுலும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் இது தொடர்பாக கூறியது: வலுவான லோக்பால் வேண்டும் என்பதை பெய ரளவில் மட்டும்தான் பா.ஜ.க வலியுறுத்தி வந்துள் ளது. 

லோக்பாலுக்கு அரசியலமைப்பு சட்ட அந் தஸ்து தரும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க மறுத்த தன் மூலம் அவர்களின் செயல்பாடு வெளிப் பட்டுள்ளது. மக்களவையில் வலுவான லோக்பால் நிறைவேற விடாமல் தடுத்துவிட்டனர் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக