வெள்ளி, மே 30, 2014

தெலுங்கானாவில் புதிய ஆட்சி: சந்திரசேகர ராவுக்கு கவர்னர் அழைப்பு

ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு நாட்டின் 29–வது மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

நடிகை மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார்

மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார்!
'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா.
இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார்.
தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார்.
இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம்..

தலித்பெண்கள் கற்பழித்துக்கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு மாயாவதி வலியுறுத்தல்

தலித்பெண்கள் கறிபழித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாயாவதி உ.பி. அரசை கடுமையாக சாடியுள்ளார். உத்தர பிரதேசத்தில் உள்ள பதான் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இரண்டு மைனர் பெண்களை கும்பலாக சேர்ந்து கற்பழித்து தூக்கில் போட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், மே 29, 2014

கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ காலமானார்

லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங் களில் நின்றொளிரும் ஒளியாய் எழுந்த கறுப்பினப் பெண் கவிஞர் மாயா ஏஞ்சலோ அமெரிக்காவில் உள்ள தனது இல்லத் தில் புதன்கிழமை மரணமடைந்தார். சில நாட்களாகவே அவர் உடல்நலம் குன்றியிருந்தார். அவருக்கு 86 வயது. புதன்கிழமை காலை 8 மணியளவில் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

2 போலீஸ்காரர் உள்பட 7 பேர் கும்பல் 2 சிறுமிகளையும் கற்பழித்து கொலை.

உத்தரப்பிரதேச மாநிலம் படான்நகர் அருகே உள்ளது கத்ரா கிராமம். இங்கு வசிக்கும் தலித் குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று மாயமாகி விட்டனர்.

குண்டு வெடிப்பு வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான புலன் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதன், மே 28, 2014

கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட உலகின் வலிமையான சிறுவர்கள்

ரோமானியா நாட்டை சேர்ந்த 9 வயதான குய்லியானோ ஸ்ட்ரோ மற்றும் 7 வயதான க்ளாடியூ ஆகியோர் உலகின் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டவர்கள் என பெயர் பெற்றுள்ளனர். 

அரசுப் பொறுப்புகளுக்கு காய் நகர்த்தும் பாஜகவினர்: பதவிகள் பெற தீவிரம்

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதையடுத்து பல்வேறு துறைகளின்கீழ் உள்ள நிறுவனங்கள், அமைப்புகளில் பொறுப்புக்களை பெறுவதில் பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திங்கள், மே 26, 2014

ராஜபக்சே விவகாரத்தில் பதவியைக் காட்டி கூட்டணி கட்சிகளுக்கு ‘செக்' வைத்த பாஜக

மோடியின் பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்‌சே பங்கேற்கும் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகு முறை முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. பின்னணியில் அமைச்சரவையில் பங்கு, மாநிலங் களவை உறுப்பினர் பதவி, வழக்கு களிலிருந்து தப்பிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

பாஜக அரசு மீதான அணுகுமுறை: மே 29-ல் மதிமுக ஆலோசனை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் 29.05.2014 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் காலை 11.00 மணிக்கும், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கிறது.

சோமாலியா நாடாளுமன்றம் மீது தாக்குதல்:10 பேர் பலி!

சோமாலியா நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் குறைந்த 10 பேர் பலியாகியுள்ளனர். பெரிய ஆயுதங்களை ஏந்தியவர்கள் வாயில் கதவை வெடிவைத்து தகர்த்துவிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

ஞாயிறு, மே 25, 2014

12 ஆண்டுகளுக்குப் பின் தோமஸ் கிண்ணத்தை நெருங்கியது மலேசியா

12 ஆண்டுகளுக்குப் பிறகு தோமஸ் கிண்ண பூப்பந்தாட்டத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மலேசிய அணி. இதன் மூலம், தோமஸ் கிண்ணத்தை மீண்டும் நெருங்கியுள்ளது மலேசியா.இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி, சிரி ஃபோர்ட் அரங்கத்தில் ஜப்பானுடன் இறுதிச் சுற்றில் களமிறங்கவிருக்கிறது மலேசியா.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஷாஸியா இல்மி, கேப்டன் கோபிநாத் விலகல்!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஷாஸியா இல்மி மற்றும் கேப்டன் கோபிநாத் ஆகியோர் விலகியுள்ளனர்.

சனி, மே 24, 2014

தாவூத் இப்ராகிமையும் நவாஸ் ஷெரிப் அழைத்து வருவாரா?: காங். கிண்டல்

நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்ஸல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸை மக்கள் தண்டித்தனர் - தபஸ்ஸும்!

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டு கொலைச் செய்த காங்கிரஸ் கட்சியையும், தேசிய மாநாட்டுக் கட்சியையும் மக்கள் தண்டித்துள்ளனர் என்று அப்ஸல் குருவின் மனைவி தபஸ்ஸும் தெரிவித்தார்.

இஷ்ரத் வழக்கு: ஐ.பி அதிகாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரும் சி.பி.ஐ!

நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்க இன்னும் சில தினங்களே மீதமுள்ள நிலையில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி அதிகாரிகளை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ அனுமதி கோரியுள்ளது.

வெள்ளி, மே 23, 2014

காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து: பா.ஜனதா முடிவு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் இண்டாவது இடத்தை பிடித்துள்ளதால் அது எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 19 பேர் 499 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தனர்

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் 26–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை பள்ளிகள் மூலம் 10.38 லட்சம் மாணவர்களும் தனித் தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவ–மாணவிகளும் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு : பாஜகவுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், பயங்கரவாத விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

வியாழன், மே 22, 2014

உலக பணக்கார நடிகர் பட்டியலில் ஷாருக்கான் 2-வது இடம்

ஹாலிவுட், பாலிவுட் உள்ளிட்ட சினிமா நடிகர்களின் உலக பணக்கார பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டைக் காப்பாற்ற தனது பிள்ளைகளை பணயம் வைக்கும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது- திப்பு சுல்தான்

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய திப்பு உண்மையில் மத நல்லிணக்கவாதியாகவே விளங்கினார். இந்துக்களின் ஏகப்பிரதிநிதியாக சிவாஜியை இன்று முன்னிறுத்துகிறார்கள் சிவசேனா வகை வானரங்கள்.

போராட்டத்திற்கான தருணம்: காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் அழைப்பு

தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், "இது போராட்டத்துக்கான தருணம். நாம் தயாராவோம்" என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

புதன், மே 21, 2014

பீகார் புதிய முதல்-மந்திரியாக ஜிதன்ராம் மஞ்சி பதவி ஏற்றார்

பீகார் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார், தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு செய்ததை நிதிஷ்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நிதிஷ்குமார், பீகார் மாநில புதிய முதல்-மந்திரியாக, தனது ஆதரவாளரான ஜிதன்ராம் மஞ்சியை தேர்வு செய்தார்.

கொலம்பியாவின் பேருந்து தீ விபத்தில் 31 பிஞ்சுகள் பலி

தென் அமெரிக்காவில் திங்கட்கிழமை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. கொலம்பியாவில் குழந்தைகளை ஏற்றி சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 31 இளம் பிஞ்சுகள் பரிதாபமாய் பலியாகியுள்ளன.

இரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை இன்னும் சில நாடகளுக்குத் தொடரும் .

இன்று பல இடங்களில் இலகு இரயில் போக்குவரத்து தடைப்பட்டது. இதில் குறிப்பாக கிளானா ஜெயா நிலையத்திலிருந்து புறப்பட்டு கோம்பாக் செல்லும் இந்த இலகு இரயில் சேவை தடைப்பெற்றது.

செவ்வாய், மே 20, 2014

தோமஸ் மற்றும் உபர் கிண்ண பூப்பந்து போட்டி முடிவுகள்

புதுடில்லியில் நடைபெற்று வரும் தோமஸ் உபர் கிண்ண காற்பந்து போட்டி முடிவுகள்:
 தோமஸ் கிண்ண முடிவுகள்
 B குழு
டென்மார்க் ஹாங்காங்கை 4-1 என்ற புள்ளிகளில் வென்றது
ஜப்பான் இங்கிலாந்தை 4-1 என்ற புள்ளிகளில் வென்றது
 C குழு
மலேசியா இந்தியாவை 4-1 என்ற புள்ளிகளில் வென்றது
 தென்கொரியா ஜெர்மனியை 3-2 என்ற புள்ளிகளில் வென்றது
D குழு
சீனா பிரான்ஸ் நாட்டை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
 உபர் கிண்ண முடிவுகள்
X குழு
இந்தோனேசியா ஆஸ்திரேலியாவை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
தென்கொரியா சிங்கப்பூரை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
  W குழு
சீனா ரஷ்யாவை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது
 இங்கிலாந்து தைவானை 3-2 என்ற புள்ளிகளில் வென்றது
Y குழு
இந்தியா கனடாவை 5-0 என்ற புள்ளிகளில் வென்றது



MH370 பற்றிய Vanishing Act திரைப்பட டிரைலருக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்

கடந்த மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானத்தை மையமாக வைத்து வெளியான Vanishing Act திரைப்படத்தின் டிரைலரைக் கண்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி, குமரி மாவட்ட அதிமுக செயலர்கள் அதிரடி நீக்கம்

தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, தரும்புரி, கன்னியாகுமரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி மாவட்ட அதிமுக செயலர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், மே 19, 2014

பாராளுமன்ற தேர்தல் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 4 லட்சம் ஓட்டுகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:–
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி முதல் முறையாக, தமிழ் நாட்டில் 3 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.

கலவரம் எதிரொலி: வியட்நாமில் இருந்து வெளியேறும் சீனர்கள்

தெற்கு சீன கடலில் பராசல் தீவுகள் உள்ளன. தற்போது அது சீன கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு வியட்நாமும், தைவானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இப்பிரச்சினை காரணமாக சீனாவுக்கும், வியாட்நாமுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

"புரட்சி திலகமாக " மாறிய சரத்குமார்

சினிமாவில் நடிகர்கள் தனது பெயருக்கு முன்னால் அடைமொழிகளைப் பயன்படுத்துவது வழக்கம் அந்தவகையில் நடிகர் சரத்குமார் தனது பெயருக்கு முன்பு சுப்ரீம் ஸ்டார் எனும் பட்டத்தைப் பயன்படுத்தி வந்தார்.

ஹுடுட் பற்றி பேசுவதற்கு ராம் கர்பாலுக்கு உரிமை இல்லை-சுயேட்சை வேட்பாளர்

ஜ.செ.க சார்பில் ஹுடுட் சட்டம் பற்றி பேசுவதற்கு ராம் கர்பால் சிங்கிற்கு எவ்வித உரிமையும் கிடையாது என புக்கிட் குளுகோர் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலின் சுயேட்சை வேட்பாளர் முகமது நபி புக்ஸ் முகமது நபி அப்துல் சாதார் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா: கருணாநிதி மறுப்பு

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

ஞாயிறு, மே 18, 2014

1AZAM Malaysia திட்டத்தின் மூலம் 140,296 சிறு வணிகர்கள் உருவாக்கம்- பிரதமர்

அரசாங்கம் மேற்கொண்டு வரும் 1AZAM Malaysia திட்டத்தின் வழி கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 140,296 சிறுதொழில் வணிகர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

தெற்காசிய கூடைப்பந்து போட்டி: இந்திய ஆண்கள் அணி சாம்பியன்

3-வது தெற்காசிய ஆண்கள் சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மாலத்தீவை சந்தித்தது.

14 தொகுதியிலும் படுதோல்வி: ேதமுதிக வாக்கு வங்கி சரிவு

தமிழகத்தில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவை மக்களவைத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம்பெற்ற தேமுதிக, போட்டியிட்ட 14 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றி பெறமுடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.

சனி, மே 17, 2014

ஆம் ஆத்மி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி

மராட்டியத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வி கண்டது.
ஆம் ஆத்மி
நாட்டில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி அன்னா ஹசாரே விதைத்த விதையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முளைத்த கட்சி ஆம் ஆத்மி. அந்த கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்று அனைவரது புருவத்தையும் உயர்த்தியது.
இதனால் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த கட்சி பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளுக்கு சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல அந்த கட்சி நாடு முழுவதும் பெரும்பான்மையான தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. குறிப்பாக மராட்டியத்தில் 33 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த கட்சி சார்பில் பிரபல சமூக சேவகர் மேதா பட்கர் (வடகிழக்கு மும்பை) அஞ்சலி தமானியா (நாக்பூர்) ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர்.
தோல்வி
ஆரம்பத்தில் பெரிய கட்சிகளுக்கு சவாலாக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தோற்றம் அளித்தனர். ஆனால் தேர்தல் தேதி நெருங்கியதையொட்டி அவர்களின் செல்வாக்கு பலவீனம் அடைய தொடங்கியது.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது ஆம் ஆத்மி மராட்டியத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மசோதாக்களை நிறைவேற்றும் பலம் இல்லை மாநிலங்களவையில் பாஜ.வுக்கு நெருக்கடி

தேர்தலில் 335 இடங் களை பிடித்து ஆட்சி அமைத்த போதிலும், மற்ற கட்சிகளின் ஆதரவை நம்பியே மாநிலங்களவையில் பாஜ இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவை மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 240.

வியாழன், மே 15, 2014

மாயமான மலேசிய விமானம்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேடுதல் பணி தற்காலிக நிறுத்தம்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமானது.  அதில் பயணம் செய்த 239 பேரின் நிலைமை இன்னும் தெரியவரவில்லை.

உலக கோப்பை ஆக்கி: சர்தார் சிங் தலைமையில் இந்திய அணி பங்கேற்பு

ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் வருகிற 31-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

ஐதராபாத் மதக்கலவரம்: நீதி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

ஐதராபாத்தில் ஒரு மதத்தை சேர்ந்தவர்களின் கொடி எரிக்கப்பட்டதையடுத்து கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினர் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களை எச்சரித்தும் கலைந்து செல்லவில்லை. 

தென் கொரியாவின் காற்பந்தாட்ட வீரர் பார்க் ஜி சுங் ஓய்வு

2002-ஆம் ஆண்டில் உலக கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வானதைத் தொடர்ந்து UEFA சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் போட்டியில் ஆசியாவின் முதல் போட்டியாளர் என்ற புகழையும் பெற்ற பார்க், மென்சஸ்டர் யுனைடட் காற்பந்து குழுவின் முன்னாள் காற்பந்து வீரர் ஆவார்.

சிறுமியிடம் சில்மிஷம்: அமெரிக்காவில் இருந்து பாதிரியார் வெளியேற்றம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ சார்லஸ் கோப்பாலா(48). அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிவந்த இவர், 12 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதற்காக கடந்த 8-6-2013 அன்று கைது செய்யப்பட்டார்.

சட்டமன்றம் கலைக்கப்படாது: தேசிய முன்னணி தொடர்ந்து வழிநடத்தும்

திரங்கானுவில் மூன்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறியதால் அம்மாநிலத்தில் தேசிய முன்னணி பெரும்பான்மையை இழந்தாலும் தொடர்ந்து மாநில ஆட்சியை வழிநடத்தும் என புதிய மாநில மந்திரிபுசார் டத்தோ அஹ்மாட் ரசிஃப் ரஹ்மான் தெரிவித்தார்.

புதன், மே 14, 2014

வாரணாசி: முஸ்லிம் பகுதிகளில் 6 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுப்பு!


16-வது மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்த வாரணாசி மக்களவை தொகுதியில் 6 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் 7 ராணுவ வீரர்களை கொன்ற கிளர்ச்சியாளர்கள்: மீண்டும் பதட்டம்

உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்தபிறகு, கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்களும் தனி நாடு கோரி வருகின்றனர். இதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் இன்று 7 உக்ரைன் அரசு படை வீரர்களைக் கொன்றனர். இதையடுத்து உக்ரைனில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதா சட்டமானது

ஊழல்களை வெளிக்கொண்டு வரும் இடித்துரைப்பாளர்களின் (Whistle-blower) பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

மக்களவை தேர்தல் செலவு ரூ.3,426 கோடி: கடந்த தேர்தலை விட 131 சதவீதம் அதிகம்!

அண்மையில் நிறைவடைந்த 16-வது மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு ரூ. 3,426 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் 131 சதவீதம் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

செவ்வாய், மே 13, 2014

மெக்சிகோவில் வன்முறை: போதை மருந்து கும்பலின் தலைவர் கொலை

மெக்சிகோவில் பிரபலமாக இருக்கும் செட்டாஸ் போதை மருந்து கடத்தல் கும்பல் வன்முறை செயல்களில் ஈடுபட்டுவந்ததினால் அரசு இந்த இயக்கத்தின் தலைவனைத் தேடிவந்தது.

மூன்று அம்னோ பிரதிநிதிகள் இராஜினாமா

புக்கிட் பெசி சட்டசபை உறுப்பினர் ரொஸ்லி தாவுத், முன்னாள் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அகமது சாயிட் மற்றும் அஜில் சட்டசபை உறுப்பினர் கசாலி தாயிப் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அம்னோவிலிருந்து தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.