புதன், மே 21, 2014

கொலம்பியாவின் பேருந்து தீ விபத்தில் 31 பிஞ்சுகள் பலி

தென் அமெரிக்காவில் திங்கட்கிழமை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. கொலம்பியாவில் குழந்தைகளை ஏற்றி சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 31 இளம் பிஞ்சுகள் பரிதாபமாய் பலியாகியுள்ளன.

 இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டது என்ற செய்திகள் வெளியாகியுள்ள இந்நிலையில், அந்த பேருந்தின் ஓட்டுனர் தலைமறைவாகியுள்ளார். மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக 1-லிருந்து 5 வயது வரை உள்ள குழந்தைகளை ஏற்றி சென்ற பேருந்தின் ஓட்டுனர், மண்ணெண்ணெய் நிரப்பிய கலன்களை குழந்தைகள் இருந்த பகுதியில் வீசி எறிந்ததாக விபத்தில் உயிர் பிழைத்த இரு பெரியவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் இது தற்செயலாக நிகழ்ந்த விபத்தாக இருக்கலாம் என சமாதானமடைந்த இக்குழந்தைகளின் உறவினர்கள், அந்த ஓட்டுனரின் வீட்டை முற்றுகை இட்டு பார்த்ததில் இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட சில பொருட்களை கண்டெடுத்துள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவத்தைக் குறித்து போலிசாருக்கு சந்தேகம் எழவே, தலைமறைவான ஓட்டுனரின் மீது வழக்கு பதிவாகியுள்ளது. தப்பியோடிய ஓட்டுனரை கண்டுப்பிடிக்கும் தீவீர முயற்சியில் போலிசார் இறங்கியுள்ளனர்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக