வியாழன், மே 15, 2014

உலக கோப்பை ஆக்கி: சர்தார் சிங் தலைமையில் இந்திய அணி பங்கேற்பு

ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் வருகிற 31-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 
அணிக்கு சர்தார் சிங் கேப்டனாகவும், ருபிந்தர் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்குக்கு பிறகு மோசமான ஆட்டத்தால் நீக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த குர்பஜ் சிங், கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறார். 

இந்திய அணி விவரம் வருமாறு:- சர்தார்சிங் (கேப்டன்), ஸ்ரீஜேஷ் (கோல் கீப்பர்), ஹர்ஜோத் சிங் (கோல் கீப்பர்), குர்பஜ் சிங், ருபிந்தர் பால் சிங், வி.ஆர்.ரகுநாத், பிரேந்திர லக்ரா, கோதாஜித் சிங் கடம்பம், மன்பிரீத் சிங், எஸ்.கே.உத்தப்பா, தரம்விர் சிங், ஜஸ்ஜித் சிங், சிங்லென்சனா சிங், எஸ்.வி.சுனில், ராமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், நிக்கின் திம்மையா, மன்தீப்சிங். இந்திய கேப்டன் சர்தார் சிங் கூறுகையில், ‘எனது 2-வது உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்த இருப்பது, எனக்கு கிடைத்த கவுரவமாகும். எங்களிடம் உலகின் சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளனர். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எங்களுக்கு கடினமான பயிற்சிகளை அளித்திருக்கிறார்கள். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் நன்றாக ஆட முடியும், எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக