திங்கள், மே 19, 2014

"புரட்சி திலகமாக " மாறிய சரத்குமார்

சினிமாவில் நடிகர்கள் தனது பெயருக்கு முன்னால் அடைமொழிகளைப் பயன்படுத்துவது வழக்கம் அந்தவகையில் நடிகர் சரத்குமார் தனது பெயருக்கு முன்பு சுப்ரீம் ஸ்டார் எனும் பட்டத்தைப் பயன்படுத்தி வந்தார்.


ஆனால் திடீரென தற்போது சுப்ரீம் ஸ்டாருக்குப் பதிலாக தனது பெயருக்கு முன்னால் புரட்சி திலகம் என்ற அடைமெழியைப் பயன்படுத்த முடிவுச் செய்துள்ளாராம்.
சில காலமாகவே அரசியலில் பிசியாக இருந்த சரத்குமார் இப்போதுஅடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தனது அடுத்த படமாக சண்டமாருதம் எனும் படத்தில் ‘நடிக்கவுள்ளார் இப்படத்தை சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்க ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். இப்படத்தில் சரத் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார்.  
இப்படத்தில் தான் சரத்குமார் தனது பெயரை புரட்சி திலகம் என மாற்றவுள்ளாராம். இப்பெயரையே தனது அடுத்தடுத்து படங்களிலும் பயன்படுத்தவுள்ளாராம். தனது பெயரை புரட்சி திலகமாக்க அப்படி என்ன இவர் புரட்சி செய்தார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக