ஞாயிறு, மே 04, 2014

அனைவருமே கண்காணிக்கப்படுகின்றனர்!-எட்வர் ஸ்நோடன்!

முன்னாள் அமெரிக்க உளவுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, அமெரிக்க ராணுவ, அரசு ரகசியங்களைக் கசிய விட்ட எட்வர்ட் ஸ்நோடன், டொரண்டோவின் ராய் தாம்ஸன் ஹாலில் ஒரு நிகழ்ச்சியில் காணொளி மூலம் பங்கேற்றார்.
வெள்ளிக்கிழமை நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியபோது, அமெரிக்க மக்கள் அனைவரும்… அவர்கள் தனிப்பட்ட நபர் என்றுதான் இல்லை… அவர்கள் அனைவருமே அரசின் கண்காணிப்பின் கீழ்தான் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
பொதுவாக, பிரச்னைக்குரியவர்கள், சமூக விரோதிகள் என்றுதான் அரசால் கண்காணிக்கப்படுவார்கள் ஆனால் இப்போது அந்த மரபு சார்ந்தவைகள் எல்லாம் போய்விட்டது. அனைவருமே கண்காணிக்கப்படுகிறார்கள். தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள், எழுத்துகள், ஒருவர் இணையத்தில் தேடுபொறியில் தேடு வரலாறுகள், எதை நீங்கள் வாங்கினீர்கள், எதை விற்றீர்கள், உங்கள் நண்பர்கள் யார், நீங்கள் எங்கு செல்கிறீர்கள், யாரை நீங்கள் நேசிக்கிறீர்கள், காதலிக்கிறீர்கள் எல்லாம் அரசுக்கு அத்துபடி என்று அந்த காணொளிக் காட்சியில் ஸ்நோடன் மக்களிடம் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக