செவ்வாய், மே 06, 2014

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியது.

இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறுகையில்: நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 5.18 மணிக்கு ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோளில் 6 புள்ளிகளாக பதிவாகியது. டோக்கியோவுக்கு தெற்கே உள்ள இசு ஒஷிமா தீவுகளில் கடலுக்குள் அடியில் 160 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிலநடுக்கத்தில் 17 பேர் காயமடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து புல்லட் ரயில் சேவையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ரயில்களின் வேகமும் சற்று குறைத்து இயக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக