புதன், மே 07, 2014

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் கைது

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கடந்த 1–ந் தேதி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வெடித்தது. இதில் சுவாதி என்ற பெண் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.


இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. நேற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து ரயில் நிலையத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே போனில் பேசிய வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவன் செல்போனில் பேசியிருந்தது தெரியவந்தது.
அவனது செல்போன் தற்போது எங்கிருக்கிறது என போலீசார் செல்போன் டவர் மூலம் கண்காணித்தனர். நேற்று இரவு சென்னை–புதுவை ஈ.சி.ஆர். சாலையில் வழி நெடுக உள்ள டவர்களில் அவனது செல்போன் பதிவானது.
இதையடுத்து அவன் புதுவைக்கு வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறான் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இதனால் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை டோல்கேட்டில் சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த பஸ்சை சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் அந்த பஸ்சில் பயணம் செய்வது தெரியவந்தது. அவனை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவன் பெங்களூரை சேர்ந்தவன். பெயர் சிவக்குமார் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது.
அவனிடம் ஏராளமான சிம் கார்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிவக்குமாரை விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்து சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக