சனி, ஜூலை 05, 2014

லீக் சுற்றில் முதல் இடம் பெற்ற 8 அணிகளே கால் இறுதிக்கு தகுதி பெற்ற ருசிகரம்

பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அவற்றில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
நாக் அவுட் சுற்று முடிவில் பிரேசில், நெதர்லாந்து, கொலம்பியா, கோஸ்டாரிகா, பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் கால் இறுதிக்குத் தகுதி பெற்றது. இந்த 8 அணிகளுமே லீக் சுற்றில் முதல் இடத்தை பெற்ற அணிகளாகும்.

லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இருந்து பிரேசில், மெக்சிகோவும், ‘பி’ பிரிவில் இருந்து நெதர்லாந்து, சிலியும் ‘சி’ பிரிவில் இருந்து கொலம்பியா, கிரீசும் ‘டி’ பிரிவில் இருந்தும் கோஸ்டாரிகா, உருகுவேயும் ‘இ’ பிரிவில் இருந்து பிரான்ஸ், சுவிட்சர்லாந்தும் ‘எப்’ பிரிவில் இருந்து அர்ஜென்டினா, நைஜீரியாவும் ‘ஜி’ பிரிவில் ஜெர்மனி, அமெரிக்காவும் ‘எச்’ பிரிவில் பெல்ஜியம், அல்ஜீரியா அணியும் முதல் இரண்டு இடங்களை பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ, சிலி, கிரீஸ், உருகுவே, சுவிட்சர்லாந்து, நைஜீரியா, அல்ஜீரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தோல்வி அடைந்து வெளியேறின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக