ஞாயிறு, ஜூலை 06, 2014

4 தமிழ் ஈழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது

நாடளாவிய நிலையில் போலீசார், LTTE எனப்படும் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தைச்  சேர்ந்த முக்கியத் தலைவர்கள் என நம்பப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழ் ஈழ விடுதலைப் புலி இயக்கத்தினர், மலேசியாவில் பதுங்கி இருந்துகொண்டு, தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தளமாகப் பயன்படுத்தி தங்கள் இயக்கத்தைப் புதுபிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீசார் நம்புகின்றனர். 
இதுவரை செர்டாங், செந்துல், சுங்கை பீசி, மற்றும் கே.எல் சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் இதுவரை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஆகக் கடைசியாக கைது செய்யப்பட்ட LTTE இயக்கத்தினர் நான்கு பேரின் பெயர்களை வெளியிடாத புக்கிட் அமான் தீவிரவாத சிறப்புப் பிரிவு, கைதானவர்களில் ஒருவர் வெடிகுண்டு நிபுணர் என்றும் மற்றொருவர் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரத்துங்க-வை டிசம்பர் 8, 1999-ஆம் ஆண்டு தற்கொலை வெடிகுண்டு மூலம் கொல்ல திட்டமிட்டவர் என உறுதிபடுத்தியுள்ளது. 
32, 37, 43, மற்றும் 45 வயதுடைய அந்த நான்கு தமிழ் ஈழ விடுதலை புலிகள் உறுப்பினர்களும் இதற்கு முன்னர் இலங்கையில் பல தாக்குதல்களை நடத்தியவர்கள் என்றும் புக்கிட் அமான் தீவிரவாத சிறப்புப் பிரிவு கூறுகிறது. 
கைதான நால்வரில் வெடிகுண்டு நிபுணராக இருப்பவர் UNHCR எனப்படும் ஐ.நா அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக