ஜெருசலமில் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஃபலஸ்தீன் சிறுவன் முஹம்மது அபூ காதிர் உயிரோடு எரித்துக்கொலைச் செய்யப்பட்டது போஸ்ட்மார்டம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபலஸ்தீன் அட்டர்னி ஜெனரல் முஹம்மது அல் வைவியை மேற்கோள்காட்டி ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.ஆனால், சிறுவனின் கொலைக்கு காரணம் தங்களுக்கு தெரியாது என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஃபலஸ்தீன் ஃபாரன்சிக் இன்ஸ்ட்யூட் இயக்குநர் ஸாபிர் அல் அலவலின் முன்னிலையில் இஸ்ரேல் மருத்துவர்கள் போஸ்ட்மார்ட்டம் நடத்தினர்.90 சதவீதம் உடல் தீக்காயமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட காதிரின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.போஸ்ட்மார்டம் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இரவு காதிர் கொல்லப்பட்டுள்ளார்.வெள்ளிக்கிழமை கிழக்கு ஜெருசலமில் ஷுஃபாத் மாவட்டத்தில் காதிரின் வீட்டிற்கு அருகே நடந்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.காதிரின் கொலையை கண்டித்து வீதியில் இறங்கி போராடிய ஃபலஸ்தீன் இளைஞர்கள்-இஸ்ரேல் போலீஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது.மேற்கு கரையில் வலுவடைந்துள்ள போராட்டம் நேற்று வடக்கு இஸ்ரேலின் அரபு நகரங்களிலும் பரவியுள்ளது.இஸ்ரேலிய போலீஸ் ஏராளமான ஃபலஸ்தீன் இளைஞர்களை கைதுச் செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக