பராமரிப்பு பணி காரணமாக டெல்லியில் இருந்து கான்பூருக்கு செல்லும் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியிருப்தபாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில தொழில்நுட்ப காரணங்களுக்காக டெல்லி-கான்பூர் வழித்தடத்தில் இரண்டு வாரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்பின்னர் வழக்கமான விமானங்கள் இயக்கப்படும் என்று கான்பூர் விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் நேகி தெரிவித்துள்ளார். இதுபோன்று பராமரிப்பு பணிகளுக்காக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லி-கான்பூர் விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஆரம்பத்தில் வாரத்தில் 6 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டன. பின்னர் வாரத்தில் இரண்டு விமானங்களாக குறைக்கப்பட்டன. அத்துடன் விமானமும் மாற்றப்பட்டது. முதலில் இயக்கப்பட்ட 72 இருக்கை கொண்ட விமானத்திற்குப் பதிலாக, 48 இருக்கைகள் கொண்ட சிறிய விமானமே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக