லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசி நகரை கைப்பற்றி விட்டதாக இஸ்லாமிய போராளிகள் அறிவித்துள்ளனர்.அந்நாட்டின் அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து அங்கு போராளிகளின் கை மேலோங்கி வருகிறது. தலைநகர் திரிபோலியில் செயல்பட்ட தங்கள் தூதரகத்தை கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா இழுத்து மூடியது. ஐ.நா அமைப்பு, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுள்ளன.
லிபியாவின் பெரும் பகுதியை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய போராளிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்நிலையில்,லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பென்காசி நகரை கைப்பற்றி விட்டதாகவும், அந்நகரம் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் இஸ்லாமிய போராளிகள் இயக்கம் இன்று அறிவித்துள்ளது.
பென்காசியின் ராணுவ தலைமையகம் உள்பட அனைத்தும் தங்கள் வசமாகி விட்டதாக அன்சர் அல் ஷரியா இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். பென்காசி ஷுரா குழு உறுப்பினர்களில் ஒருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக