ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் I.S.I.S. கிர்குக், திக்ரித், மொசூல் உள்ளிட்ட நகரங்களையும், ஏராளமான சிறு நகரங்களையும் கைப்பற்றி உள்ளனர். அவற்றை மீட்பதற்கு ஈராக் படைகள் போரிட்டு வருகின்றன.
இதனால் பல இடங்களிலும் ராணுவத்தினருக்கும், I.S.I.S க்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
பாக்தாத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள துலையா என்ற நகரை கடந்த மாதம் I.S.I.S கைப்பற்றி இருந்தனர். அந்த நகரை உள்ளூர் போலீசாரும், பொதுமக்கள் படையும் சேர்ந்து மீட்டார்கள்.
ஆனால் I.S.I.S அந்த நகரின் மீது திடீரென மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள். இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் போலீஸ் மற்றும் பொதுமக்கள் படை பின்வாங்கியது. தற்போது அந்த நகரை கைப்பற்றி விட்டதாக I.S.I.S அறிவித்துள்ளது. இந்த சண்டையில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். நகரில் உள்ள 3 போலீஸ் நிலையங்களை I.S.I.S குண்டு வைத்து தகர்த்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் சண்டை நடந்து வருகிறது. துலையா நகரை பிடித்த I.S.I.S அங்கிருந்து இன்னொரு நகரை பிடிப்பதற்கு முன்னேறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதை தடுக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக