செவ்வாய், ஏப்ரல் 26, 2011

குவாண்டனாமோ சிறையில் நிரபராதிகள்: விக்கிலீக்ஸ்


குவாண்டனாமோ சிறையில் ஒரு கைதி

குவாண்டனாமோ பே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பங்கினர் ஒன்று நிரபராதிகள் என்றோ அல்லது வெறுமனே கீழ் மட்டத்தில் செயல்பட்டவர்கள் என்றோதான் அமெரிக்க அதிகாரிகள் நம்பியிருந்தனர் என்று விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ள ஆவணங்கள் காட்டியுள்ளன.
டெய்லி டெலிகிராஃப், வாஷிங்டன் போஸ்ட் போன்ற நாளிதழ்களில் தற்போது வெளிவந்துள்ள ஆவணங்கள், குவாண்டனாமோ பே சிறையில் பல்வேறு காலகட்டங்களிலுமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த எழுநூற்று எண்பது பேர் பற்றி ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட மதிப்பீடுகள் பற்றி தகவல் தருகின்றன.
முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் சுமார் நூற்று ஐம்பது பேர், நிரபராதிகளாக கருதப்படக்கூடிய ஆப்கானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர் என்று ஆய்வுகள் மூலம் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் வருணிக்கப்பட்டுள்ளனர்.

கல்மாடி.. கஸ்டடி.. செருப்படி...

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் கல்மாடி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொது செயலாளர் ஜனார்த்தன துவிவேதி, கட்சிப்பதவிகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சுரேஷ் கல்மாடி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதே, காங்கிரஸ் கட்சி செயலாளர் பொறுப்பிருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஒலிம்பிக் சங்க தலைவர் பொறுப்பிலிருந்தும் அவரை நீக்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் பரிந்துரைத்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற காமன்வெல்த் போட்டிகளில் நடந்தேறிய ஊழல் தொடர்பில், 6 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்இனப் படுகொலை- சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியுள்ளது.

APRIL , புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியுள்ளது.

மேலும் புலனாய்வுத் தொடர்பான விபரங்களை குஜராத் அரசுக்கு கசியச் செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் ஐ.ஜி.சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலங்களை பதிவுச் செய்வதில் சிறப்பு புலனாய்வுக்குழு விருப்பமில்லாமல் இருந்ததாக சஞ்சீவ் பட் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

“2009 நவம்பர் மாதம் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு நான் ஆதாரங்களை அளித்த பிறகு கடந்த மார்ச் மாதம் எனது வாக்குமூலத்தை பதிவு செய்யவேண்டும்.

பீமா பள்ளி துப்பாக்கிச்சூடுவழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

April , திருவனந்தபுரம்: பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக க்ரைம் ப்ராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியபிறகு கைவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க திருவனந்தபுரம் ஜூடிஸியல் முதன்மை வகுப்பு மாஜிஸ்ட்ரேட்(இரண்டு) எ.எம்.பஷீர் க்ரைம் ப்ராஞ்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.

2009 மே 17-ஆம் தேதி பீமாப்பள்ளி-சிறியதுறை கடற்கரையில் வைத்து நடந்த அநியாயமான போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். 39 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. மரணித்த ஆறு நபர்களின் பின்பகுதியில் குண்டு தாக்கியிருந்தது.

ஆர்.எஸ்.எஸ்.யின் பிடியில் மத்திய பிரதேசம்!!

APRIL , புதுடெல்லி: மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர்.

2003-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு கல்வி துறையை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ சிறுபான்மையினரின் சமூக வாழ்க்கைக் குறித்து தனியாக கணக்கெடுப்பு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது முன்னர் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

2011-12 கல்வியாண்டில் பகவத் கீதையை பாடத் திட்டத்தில் உட்படுத்த முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக இதற்கான பணிகள் துவங்குமென அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

குஜராத் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் கட்சி வெற்றி

APRIL, காந்திநகர்: குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காந்திநகர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று காந்திநகர் மாநகராட்சியினை பிடித்துள்ளது.

இம்மாநகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

காங்கிரஸ் 18 வார்டுகளிலும், பா.ஜ. 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பா.ஜ. கோட்டை என கூறப்பட்ட காந்திநகர் மாநகராட்சியினை காங்கிரஸ் பிடித்துள்ளது.

மேலும் காந்திநகர் ‌பா.ஜ. மூத்த தலைவரும், முன்னாள் துணைபிரதமருமான எல்.கே. அத்வானியின் பார்லிமென்ட் ‌தொகுதியாகும்.

வியாழன், ஏப்ரல் 21, 2011

2ஜி ஊழல்-5 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் கைது

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுள்ள 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த 5 அதிகாரிகள் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. இதையடுத்து இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்த ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, டிபி ரியாலிட்டி அதிபர் பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் பொகுரியா, சந்தோலியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தைச் சேர்ந்த கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர், ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு பிரிவு) நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

புதுச்சேரிதுணை நிலை ஆளுநரை விசாரிக்க பிரதமர் அலுவலகம் அனுமதி


புதுவை துணைநிலை ஆளுநர் இக்பால் சிங்
புதுவை துணைநிலை ஆளுநர் இக்பால் சிங்
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள புனேவைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலியுடன் தொடர்புடையதாகப் புகார் கூறப்படும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்த பிரதமர் அலுவலகம் அனுமதியளித்துள்ளது.
இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, பிரதமர் அலுவலகத்துக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர்கள் தங்களது சட்டப்பூர்வ கடமையை ஆற்றும்போதுதான் அவர்களுக்கு, இதுபோன்ற விசாரணைகளில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தக் குறிப்பிட்ட விடயத்தில் அது தேவையில்லை என்றும் அரசு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கல்வி உதவித்தொகை மறுப்பு- குஜராத்தில்முஸ்லிம் மாணவர்கள் வேதனை...

அஹ்மதாபாத்: குஜராத்  2010-11ம் ஆண்டிற்கான தேர்வுகள் முடிந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் மேல்படிப்பு படிக்கவேண்டும் என்ற கனவுகளோடும் ஆசைகளோடும் உள்ள முஸ்லிம் மாணவர்கள் குஜராத்தில் வேதனையில் உள்ளனர்.

மத்திய அரசு பிரதமர் உதவி திட்டத்தின் கீழ் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கக் கூறி ஆறு ஆண்டுகள் ஆகிறது. குஜராத்தில் ஐந்து மில்லியன் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.

இதில் அறுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற தகுதியுடயவர்களாய் இருந்தும் ஏனோ மகாத்மா பிறந்த மாநிலத்தில் மட்டும் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்பட மறுக்கிறது.

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

நரேந்திரமோடி பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதாக மேதாபட்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

போபால்: குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் பயங்கரவாதி நரேந்திரமோடி பழங்குடியின மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதாக நர்மதா பச்சாவோ அந்தோலான் தலைவர் மேதாபட்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தை கூட்டுப் படுகொலைச் செய்த ஹிந்துத்துவா மோடி அரசு, ஸர்தார் ஸரோவர் திட்டத்தில் நிலங்களை இழந்த பழங்குடியினருக்கு தற்போது துரோகமிழைப்பதாக மேதா பட்கர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

“சில பழங்குடியின பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகினர். ஆனால், அவர்களுக்கு புகார் அளிப்பதற்கு குஜராத்தில் இடமில்லை.

காவிப்போர் (தேசத்திற்கு எதிரான போர்)- குறும்படம்

ஏப்ரல் 19, லக்னோ:‘காவிப்போர் – தேசத்திற்கு எதிரான போர்’ எனும் தலைப்பில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது.

பிஜேபி-யின் லோக் சபா எம்.பி யோகி ஆதித்யனாத்தின் தீவிரவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த குறும்படம் உத்திரபிரதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரையிடப்பட்டது.

இந்த குறும்படம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள ஹிந்துத்வா தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளை வெளிக்கொணரும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

படம் திரையிட்ட பின் நடந்த விவாதத்தில் சமூக சேவகர் டாக்டர். சந்தீப் பாண்டே கூறியதாவது; உத்திர பிரதேசத்தின் கிழக்குப் பகுதி முழுவதும் இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதை உத்திரபிரதேச அரசு கவனிக்க தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

நைஜீரியா அதிபர் தேர்தல்: ஜோனாதன் மீண்டும் வெற்றி!


நைஜீரியா அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் ஜோனாதன் மீண்டும் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
 நைஜீரியா அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபரான குட்லக் ஜோனாதன் (64) மற்றும் முன்னாள் சர்வாதிகாரியும், எதிர்க்கட்சி தலைவருமான முகமது புகாரி (59) ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.இதில் மொத்தம் பதிவான வாக்குகளில் 60.02 விழுக்காடு வாக்குகளை பெற்று ஜோனாதன் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட முகமது புகாரிக்கு 30 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன

சீனாவில் சூறாவளி: ஆலங்கட்டி மழைக்கு 17 பேர் பலி!


சீனாவில் தென் பகுதியில் நேற்று (திங்கள்) சூறாவளியுடன் பெய்த ஆலங்கட்டி மழைக்கு 17 பேர் பலியானார்கள், 155 பேர் காயம் அடைந்தனர்.
 தெற்கு சீனாவில் குவாங் டாங் மாகாணத்தில் உள்ள போஸ்கான் நகரத்தில் நேற்று கடுமையான சூறாவளி காற்று வீசியது. அதைத்தொடர்ந்து ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
போஸ்கான் நகரம் மட்டு மின்றி அதை சுற்றியுள்ள ஹாங்ஷு, ஷாலோகிங், டொங்கன் ஆகிய இடங்களிலும் கடும் சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வினாடிக்கு 45.5 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
மணிக்கு 164 கி.மீ.வேகத்தில் வீசிய புயலால், 45 வீடுகள் இடிந்து விழுந்தன. 1,087 ஹெக்டேர் பரப்பளவுள்ள  வயல்வெளிகளில் பயிர்கள் நாசம் அடைந்தன.இதனால் அங்கு 17 பேர் பலியானதாகவும், 155 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புயல் மற்றும் மழையால் 50 கோடி ரூபாய் அளவுக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

திங்கள், ஏப்ரல் 18, 2011

தேர்தல்:மலேசியாவில் ஆளுங்கட்சிக்கு வெற்றி


2_428822_1_248
கோலாலம்பூர்:மலேசியாவில் மிகப்பெரிய மாநிலமான ஸரவாக்கில் நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.
71 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நஜீப் அப்துற்றஸ்ஸாக் தலைமை வகிக்கும் நேசனல் ஃப்ரண்ட் 36 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.
2013-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேசிய தேர்தலின் முன்னோடியாக நடக்கும் மாநில தேர்தலாகும் இது. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினால் தேசிய தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என கருதப்படுகிறது.

இலங்கையின் வீதிகள் பெயர்ப் பலகைகளில் "அரபு "மொழி


அரபிக் மொழியும் வீதி பெயர் பலகையில்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் நகர சபையின் ஆளுமைக்கு உட்பட்ட வீதிகள் மற்றும் ஒழுங்கைகளின் பெயர்ப் பலகைகளில் "அரபு "மொழிக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் மட்டும் வாழும் பிரதேசம் காத்தான்குடி பிரதேசமாகும்.
தமது பிரதேசத்திற்கு தப்லீக் ஜமாத் மற்றும் தஹ்வா அமைப்புகள் என வருகை தரும் அரபியர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், வீதிகளை இலகுவாக அவர்கள் அடையாளம் காண்பதற்காகவே சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கு மேலதிகமாக நான்காவது மொழியாக அரபு மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நகர சபையின் தலைவர் எஸ்.எச்.மொகமட் அஸ்பர் கூறுகின்றார்.
இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படாத மொழியொன்று பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருப்பதை சர்ச்சைக்குரிய விடயமாக தான் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
நான்காவது மொழியாக அரபு மொழி இடம்பெறுவதற்காக மத்திய மற்றும் மாகாண உள்ளுராட்சி அமைச்சுகளிடமிருந்து எவ்வித அனுமதியையும் தான் கோரவில்லை என்றும் நகரசபைத் தலைவருக்குரிய அதிகாரத்தை தான் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கும் அவர், காத்தான்குடி நுழைவாயிலில் அமைந்திருந்த வரவேற்பு வளைவில் கூட ஏற்கனவே அரபு மொழிக்கும் இடமளிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அமெரிக்காவில் மழை, வெள்ளம்:சூறாவளி காற்றில் 50 பேர் பலி!


அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் பெய்த கனமழை, சூறாவளியால் பெரும் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
 அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களான ஒக்கலஹாமா, வடக்கு கரோலினா, வெர்ஜினியா ஆகி‌ய மாகாணங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதில் வடக்கு கரோலினாவில் வீசிய சூறாவளி காற்றினால் வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மரங்கள் ‌வேரோடு சாய்ந்தன. சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சூறாவளி காற்றினால் தூக்கி வீசப்பட்டன.
இந்த வெள்ள சேதத்தினால் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்‌மையின் நிர்வாகி ஜிலாம்ப் கூறினார். சேதமடைந்த பகுதிகளில் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு அவசரநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானில் திடீர் கலவரம்: 10 பேர் பலி!


பாகிஸ்தானில் காரச்சியில் நேற்று ஏற்பட்ட திடீர் அரசியல் கிளர்ச்சியில் 10 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் வர்த்தக நகரமான காரச்சியில், நேற்று திடீரென கலவரம் வெடித்தது. பாகிஸ்தானில் சாடா நகரில் உள்ள பஜார் முன்பு, ஜூனியாத் ஜகாதி என்பவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இவர் ‌ஜமைத்-இல்-இஸ்லாம் கட்சியினைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியின் ஒன்றிய கவுன்சில் தலைவராக உள்ளார். இவரது ‌கொலைக்கு மற்ற‌ொரு அமைப்பான முத்தாகிதா -கூவாமி இயக்கம் என்ற அமைப்பும், அவாமி தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதனால் இரு பிரவினருக்கும் ‌இடையே நேற்று திடீர் ‌மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அ‌மல்படுத்தப்பட்டுள்ளது எனவும், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், தேவைப்பட்டால் கராச்சி நகரில் சிறப்பு அதிரடிப்படையை அனுப்பி அமைதி ஏற்படுத்தப்படும் என்றார்.

சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எடியூரப்பா மறுப்பு!

கர்நாடக மாநிலத்தில் சுரங்கத் தொழில் சட்ட விரோதமாக நடத்தப்படுவதும் அதில் ஆளும் கட்சியின் அமைச்சர்களே ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்து அது மாநில அளவில் பெரும் பிரச்சனையாகவும் ஆளும் பிரதான கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்குத் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப் பட்ட மத்திய உயர் மட்டக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்து உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவையின்றி 226 பெண்களிடம் கருப்பை நீக்கம்: மருத்துவமனைகள் மீது விசாரணை!

இராஜஸ்தான் மாநிலத்தில் தவுஸா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் துர்கா பிரசாத் என்ற தன்னார்வலர்   விளக்கம் கோரினார்.
அந்த  மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட மூன்று தனியார் மருத்துவமனைகளில் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரையில் சிகிச்சை பெற்ற 385 பெண்களில் சுமார் 226 பெண்களிடம் கருப்பைகள் அகற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருப்பை சம்பந்தமான நோய்குறித்து ஆலோசனை பெறப்போகும் பெண் நோயாளிகளிடம் தேவையில்லாத ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி கருப்பைகளை அகற்றுவதற்கு ஒரு நோயாளியிடம் சுமார் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரையிலும் இதன்மூலம் பல லட்சங்கள் மேற்கண்ட மருத்தவமனைகள் சம்பாதித்திருப்பதாக பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

இலங்கையில் அரங்கேறிய பயங்கரங்கள்-ஐ.நா. குழு அறிக்கை 'லீக்'!


Srilanka Killings
ஐ.நா: இலங்கையில் கடைசிக் கட்ட போரின்போது கொடூரமான கொலைகள், கற்பழிப்புகள் உள்பட மிக பயங்கரமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் 4 மாதங்களில் பல்லாயிரணக்கான தமிழர்கள் கொத்து, கொத்தாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு ஐ.நாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.

புலிகளுக்கு எதிரான கடைசி கட்ட போரில் நடந்த கொடூரங்கள் தொடர்பாக உலகெங்கும் கடும் கண்டனங்களும், இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைதி காத்தது தொடர்பாக எதிர்ப்பும் கிளம்பியதையடுத்து இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன்.

ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் சேனல்

6baf5486-4056-4385-90bd-5654c404e472
டெல்அவீவ்: ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரேல் சேனலான 2 டி.வி நேற்று வெளியிட்டது.
நகாப் சிறையிலிருந்து கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு படம் பிடிக்கப்பட்டுள்ளன இவ்வீடியோ காட்சிகள். சித்தரவதையின் இறுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. இக்காட்சிகளைத்தான் இஸ்ரேலிய சேனல் வெளியிட்டதாக குத்ஸ்னா செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது.
சிறைக் கைதிகளுக்கெதிராக கண்ணீர் புகைக் குண்டும், க்ரேனேடும் இஸ்ரேல் ராணுவம் பிரயோகித்தது. விசாரணை நடைபெறும் வேளையில் வழக்கறிஞருடன் பேசும் உரிமை சிறைக் கைதிகளுக்கு இஸ்ரேலிய ராணுவம் மறுப்பதாக மனித உரிமை அமைப்பான சித்தரவதைக்கு எதிரான பொது குழு கடந்த ஆண்டு வெளிப்படுத்தியிருந்தது.
நாற்காலி இல்லாமல் நீண்டநேரம் அமரச் செய்வது,தூங்குவதற்கு அனுமதியின்மை ஆகியன இஸ்ரேல் சிறைகளில் கைதிகள் நிரந்தரமாக அனுபவிக்கும் சித்தரவதைகளாகும். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இதனை மறுத்துள்ளது.

ஆமை வகனமும் சாலை பாகனும்....



முன்னும் பின்னுமாக
இவன் கடந்த தூரம்
மிக மிக சொற்பம் அல்லது
கணக்கில் வராதவை 

ரோலர் ஓட்டுபவரின்
இதயம் போல
இயங்கவேண்டும்
அரசாங்கம்
முன்னதில் தெளிவும்
பின்னதில் பதிவும் 

எல்லா சாலையும்
ரோமை அடையுமா?
தெரியாது
ரோலரை அடைந்தே தீரும் 

ஆலையிட்ட கரும்பென
ஆக்கிய உவமையை, இனி
ரோலரிட்ட எறும்பென
கூறுதல் நவீனம் 


ரோலர் ஓட்டுபவன்
கடந்த காலத்தின் மனசாட்சி
சேவைகளும் தியாகங்களும்
தெரியாமல் போவதனால் 

விரைவு வாகனங்கள்
விபத்துகளின் குறியீடு
எங்கேயும் நிறுத்தலாம்
ரோலரை
எந்த பயமுமில்லாது 

நெடுஞ்சாலையெங்கிலும்
கேட்கும்
ரோலர் ஓட்டுபவனின்
நீண்ட நெடிய சங்கீதம் 

பிறருக்கான பாதைகளை
போட்டுத்தரவே
பிறப்பெடுத்தவன் போல
என்றாலும் 

வந்த பாதையை மறந்துவிடாத
இவனே விரும்பினாலும்
போக முடிவதில்லை வேகமாக..