பொதுச்சேவைத் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் SPA எனப்படும் பொதுச் சேவைத்துறையின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் துறை அமைச்சின் தகவல் பிரிவு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மூன்றாம் தரப்பினரைக் கொண்டோ அல்லது பண வசூலிப்பு மூலமாகவோ எந்தவொரு வேலை விண்ணப்பமும் பொதுச் சேவைத் துறையில் மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் டத்தின் மைமுனா என்ற பெயரில் மாது ஒருவர் தாம் அரசாங்க வேலை பெற உதவுவதாக கூறிக்கொள்வதாக பிரதமர் துறை அமைச்சின் கீழ் செயல்படும் பொதுச் சேவைத்துறைக்குப் புகார் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
டத்தின் மைமூனா எனும் அந்தம்ப் பெண், முகநூலில் தாம் பிரதமர் துறை அமைச்சின் வேலை செய்வதாகவும், அரசாங்க வேலைக்கு ஆர்முள்ளவர்கள் தம்மிடம் 750 ரிங்கிட் செலுத்தினால் நிச்சயமாக தாம் வேலை பெற்று தருவதாகவும் அப்பெண் பதிவு செய்துள்ளது பிரதமர் துறை அமைச்சின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ‘
இது போன்ற பொய் தகவல் மேலும் பரப்பப்படுவதைத் தவிர்க்கும் வகையில், சம்பந்தப்பட்ட முகநூல் அகப்பக்கம் தொடர்பில் நேற்று காவல்த்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைத்துறை தெரிவித்துள்ளது.
எனவே பொதுச் சேவைத்துறையில் பணியாற்ற விரும்புவர்கள் நேரடியாக தாங்களே பின்வரும் பொதுச் சேவைத் துறையின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்: http://spa.gov.my
பொதுச்சேவைத்துறையில் வேலைக்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் பொதுமக்கள் தாராளமாக 03-80056000 அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சின் மனித வள பிரிவை 03-80008000 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என்றும் பொதுச்சேவைத் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக