பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் சபீர் அலி எம்.பி., பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்த இவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சபீர் அலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். ஆனால் இதற்கு அக்கட்சியின் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கட்சிக்குள் நடக்கும் விஷயங்களை வெளியிடங்களில் பேசக்கூடாதென்று தெரிவித்ததாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
அலியின் இந்த வருகையை குறித்து முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், இந்தியன் முகாஜிதீனின் நிறுவனர் யாசின் பட்கலுக்கும் அலிக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் நேற்றிரவு தனது வலைத்தளத்தில் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் குழுவில் அவர் சேர வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார். அடுத்தடுத்து வந்த சர்ச்சைகளையடுத்து சபீர் அலி இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக