செவ்வாய், மார்ச் 25, 2014

4,440 டெட்டனேட்டர், 4,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்:பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகளின் சதி திட்டமா ?

கலசபாக்கம் அருகே அனுமதியின்றி வேனில் எடுத்து செல்லப்பட்ட 4,440 டெட்டனேட்டர், 4,000 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை எடுத்து சென்ற பன்னீர் செல்வம் (வயது41) என்பவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு வடக்கு மண்டல துணைசூப்பிரண்டு சேகர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் சாய்ராம் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள ஜப்தி காரியந்தலில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.
4,440 டெட்டனேட்டர்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் வேனில் 4,440 டெட்டனேட்டர் மற்றும் 4,000 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வேனை ஓட்டி வந்தது கண்ணக்குருக்கை கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது41) என்பது தெரியவந்தது.
பறிமுதல்
மேலும் வேனில் அளவுக்கு அதிகமாக அதாவது 4,440 டெட்டனேட்டர், 4,000 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. அதைத்தொடர்ந்து டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வேனை பறிமுதல் செய்த போலீசார், பன்னீர்செல்வத்தையும் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக