9வது ஜி-20 மாநாடு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
சமீபத்தில் உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டதை அடுத்து ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தடை விதிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப் கருத்து கூறியிருந்தார்.
இதற்கு இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான “பிரிக்” நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா கூறியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக