சனி, மார்ச் 22, 2014

லண்டன்: இந்திய ராணுவ அதிகாரியை கொல்ல முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை


பஞ்சாபில் உள்ள பொற்கோவிலில் பதுங்கி இருந்த சீக்கிய தீவிரவாதிகளை 1984-ம் ஆண்டு ராணுவம் அதிரடியாக வெளியேற்றிய ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற நடவடிக்கைக்கு தலைமை தாங்கியவர் லெப்டினன்ட் ஜெனரல் குல்தீப் சிங் ப்ரார்.

இந்த ராணுவ நடவடிக்கையில் சுமார் ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக சீக்கிய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஓய்வு பெற்று தற்போது 80 வயதாகும் குல்தீப் சிங் ப்ரார் மும்பையில் வசித்து வரும் இவர் கடந்த 2012-ம் ஆண்டு மனைவியுடன் லண்டன் சென்றிருந்தார். 

இந்த தம்பதியர் 30-9-2012 அன்று இரவு மத்திய லண்டனில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பிராரையும், அவரது மனைவி மீனாவையும் சூழ்ந்து கொண்டு ஆவேச தாக்குதல் நடத்தியது. இதில் ப்ராரின் தாடை, தொண்டை பகுதிகளில் பலத்த கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டது. தாடையில் ஏற்பட்ட ஒரு காயம் மட்டும் 12 அங்குல நீளம் கொண்டதாக இருந்தது.

ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைக்கு தலைமை தாங்கியதால் அதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவரை சீக்கிய காலிஸ்தான் அமைப்பினர் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த தாக்குதல் தொடர்பாக புலனாய்வு செய்த லண்டன் போலீசார் ஒரு பெண் உள்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த கொலைமுயற்சி வழக்கில் இந்தியாவில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங் மூலம் ப்ரார் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு கடந்த டிசம்பர் மாதம் தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட லக்பிர் சிங்(26) என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக