ஞாயிறு, மார்ச் 23, 2014

வளர்ச்சி முகமூடி அணிந்த பாசிசத்தை தோற்கடிக்கவேண்டும் – கேம்பஸ் ஃப்ரண்ட்! -


வளர்ச்சி முகமூடி அணிந்து வருபவர்களையும், ஊழல் வாதிகளையும் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கோழிக்கோட்டில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கடந்த ஓர் ஆண்டின் அமைப்புடைய செயல்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.பல்வேறு துறைகளில் பணிகளிலும்,வளர்ச்சியிலும் இயக்கம் மேம்பட்டுள்ளதாக கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.வரும் ஆண்டிற்கான செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

1.நரேந்திரமோடிக்கு ஆதரவாக கார்ப்பரேட் ஊடகங்கள் நடத்தும் பிரச்சாரங்களில் மாணவர்கள் வீழ்ந்துவிடக்கூடாது.

2.பா.ஜ.க மற்றும் காங்கிரஸின் வகுப்புவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக பாடுபடவேண்டும்.

3.பசியில் இருந்தும், பயத்தில் இருந்தும் மக்களை விடுவிப்பதற்காக
பாடுபடும் நவீன இயக்கங்களை ஆதரிக்க மாணவர்கள் தயாராகவேண்டும்.

4.டெல்லி பல்கலைக் கழகத்தின் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தை ரத்துச் செய்யவேண்டும்.

5.அப்ஸா, யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை வாபஸ் பெறவேண்டும்.

6.கர்நாடகா மாநிலத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மீது சாட்டிய பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.

7.மவ்லானா ஆஸாத் நேசனல் ஃபெல்லோஷிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.

8.மரணத் தண்டனையை ரத்துச் செய்யவேண்டும்.இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் பி.அப்துல் நாஸர் தலைமை வகித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக