வெள்ளி, மார்ச் 21, 2014

சிறுபான்மையினருக்கு அதிகம் வாய்ப்பளித்த மாயாவதி

மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்திர பிரதேசத்தில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டார். அப்பட்டியலில் 21 தொகுதிகளுக்கு பிராமின் இனத்தை சேர்ந்தவர்களும் 19 தொகுதிகளுக்கு முஸ்லீம் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் கடந்த தேர்தலின் போது 20 பிராமின் வேட்பாளர்களும் 14 முஸ்லீம் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது சிறும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து மாயாவதி கூறுகையில் அனைவருக்கும் சம உரிமை என்ற அடிப்படையிலேயே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்தலில் எங்களது கட்சி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் வெற்றியை தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாது மத்தியில் அதிகாரத்தை தேர்வு செய்யும் முக்கிய கட்சியாக அமையும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக