செவ்வாய், மார்ச் 25, 2014

புதுடெல்லி: தீவிரவாத வழக்கில் கைதாகி ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த அப்பாவி முஸ்லிம் நசிர் ஹுஸைன் சுவாமி சிவானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். உத்தரகாண்டில் தெஹரி கர்வால் மாவட்டத்தில் முனி கீ ரெத்தி நகரத்தில் சுவாமி சிவானந்தின் ஆசிரமம் உள்ளது.இங்கு 32 வயதான நசிர் ஹுஸைன், கட்டிட வேலைக்கு வந்தார். அங்கு 2007-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி மஃப்டியில் வந்த சிலர் ஹுஸைனை கடத்திச் சென்றதாக சுவாமி சிவானந்த் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

ஆனால் ஜூன் 21-ஆம் தேதி லக்னோவில் உள்ள ஹோட்டலில் ஹுஸைனை கைதுச் செய்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை கூறுகிறது. இந்நிலையில் சுவாமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹுஸைன் நிரபராதி என்று நீதிமன்றம் தெரிவித்து ஹுஸைனை விடுதலை செய்துள்ளது.
இவ்வழக்கில் ஏற்கனவே சுவாமி லக்னோவிற்கு சொந்த செலவில் வந்து ஹுஸைன் கடத்திச் சென்றதை காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தும் அதனை காவல்துறை பதிவு செய்யவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது
ஹுஸைன் மீது ஹரித்துவாரில் குண்டுவைக்க திட்டமிட்டார் போன்ற மிகவும் கடுமையான குற்றப்பிரிவுகளை காவல்துறை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹுஸைனின் விடுதலைக்காக உதவிய சுவாமி சிவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பதாக நஸிர் ஹுஸைனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக