புதன், மார்ச் 26, 2014

இனம் அனாதைகளின் கதை - இரண்டு மொழிகளில்கிற வெளியாது

மல்லி, டெரரிஸ்ட் என்று ஆரம்ப காலத்திலேயே சர்ச்சைக்குரிய பாதையில் சஞ்சரிக்க ஆரம்பித்தவர் சந்தோஷ் சிவன். அவரின் புதிய படைப்பு இனம். இலங்கை போர் பின்னணியில் அனாதைகளின் கதையைச் சொல்லும் படம். அதனாலேயே உலகத் தமிழர்கள் மத்தியில் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு. சென்சார் முடிந்து தயாராக இருக்கும் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.இனம் எப்படிப்பட்ட படம், அது உருவாவதற்கான விதை எங்கு கிடைத்தது என்பதைப் பற்றி சந்தோஷ் சிவனே கூறுகிறார்.

இந்தப் படம் எடுக்கணும் என்று எப்படி தோன்றியது?

இந்த ஃபிலிம் ஸ்டார்ட் பண்ணுறதுக்கு முன்னாடி லஞ்சுக்காக ஒரு ப்ரெண்டோட வீட்டுக்கு போன போது அவங்க சிலோன் ஃபுட் எல்லாம் ப்ரிப்பேர் பண்ணியிருந்தாங்க. யாரு இதை குக் பண்ணுனதுன்னு கேட்டேன். இலங்கையிலிருந்து வந்த ஒருத்தர்தான் அதை குக் பண்ணுனதா சொன்னாங்க. அங்க ஒரு பெண் இருந்தாங்க. அந்த பெண் எதுவுமே சொல்லலை. ஆனா அவங்க கண்ணுல ஒரு ஸ்டோரி இருந்தது. அப்போதான் ஒரு அகதி அங்கேயிருந்து இங்க வந்து கஷ்டப்பட்டுறது பற்றி யோசிச்சேன். அந்த எண்ணம் மனசைவிட்டு போகவேயில்லை. அந்த எண்ணத்தோட பயணம்தான் இந்தப் படம். 
சிலோன் என்ற பெயரில் இங்கிலீஸ்லயும், இனம் என்கிற பெயர்ல தமிழ்லயும் வெளியாகுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக