சனி, ஜூலை 19, 2014

ஹெல்மெட்டில் உலக கோப்பை படம்: ஜெர்மனி கார்பந்தய வீரரின் முடிவுக்கு பிபா எதிர்ப்பு

கார் பந்தயமான ‘பார்முலா–1’ போட்டியின் ஒரு சுற்று ஜெர்மனியில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இதில் மெர்சிடிஸ் அணி சார்பில் ஜெர்மனி வீரர் ராஸ்பேர்க் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் உலக கால்பந்து கோப்பையை ஜெர்மனி அணி வென்றதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதால் ராஸ்பேர்க் அதை வெளிப்படுத்த முடிவு செய்தார்.

இதற்காக கார் பந்தயத்தில் பங்கேற்றும்போது அணியும் தனது தலை கவசத்தில் (ஹெல்மெட்) ஜெர்மனி நாட்டு கொடி, உலக கோப்பை படம் ஆகியவற்றை வரைந்து அணிய போவதாக தெரிவித்தார். இதற்கு பிபா அமைப்பு (சர்வதேச கால்பந்து சங்கம்) எதிர்ப்பு தெரிவித்தார். இது விதிமீறல் செயல் ஆகும் என்று தெரிவித்து இருந்தது.

இதையடுத்து ராஸ்பேர்க் அதை கைவிட்டார். போட்டியில் ஜெர்மனி அணி கொடி பொறிக்கப்பட்ட ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக