ஞாயிறு, ஜூலை 13, 2014

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: ஜெர்மனி– அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.இதன் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

இதில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல் மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியது என்பதால் இறுதிப்போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தென் அமெரிக்கா கண்டத்தில் நடந்த போட்டிகளில் ஐரோப்பிய அணிகள் வென்றது கிடையாது. தற்போது முதல் முறையாக கோப்பையை வென்று புதிய வரலாறு படைக்க ஜெர்மனி அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

3 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி 4–வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்க அர்ஜென்டினா அணி காத்திருக்கிறது. மேலும் 3–வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்திலும் அந்த அணி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக