புதன், மே 01, 2013

பெட்ரோல் விலை ரூ.3.18 குறைந்தது !

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 3 குறைத்துள்ளன.பெட்ரோல் விலையை 2 வாரங்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை தொடர்ந்து, 
 
கடந்த மார்ச் சில் இருந்து 3 முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. கடந்த மார்ச் 16ம் தேதி லிட்டருக்கு ஸி2.40ம், பின்னர் ரூ.1ம் குறைந்தன. கடந்த மாதம் 16ம் தேதி ஸி1.20 குறைக்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஸி3 குறைத்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. 
 
இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஸி3.18 குறைந்துள்ளது. டெல்லியில் ஸி3, மும்பையில் ஸி3.15, கொல்கத்தாவில் ஸி3.13ம் விலை குறைந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ஸி5 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக