ஜெர்மனியில் கடந்த 2009ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் டிம் கிரட்ஷ்மர்(Tim Kretschmer) என்ற 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவன் அங்கிருந்த 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மேலும் இவனது துப்பாக்கிச் சூட்டால் 14 பேர் படுகாயமுற்றனர். இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போனான். இந்தச் சிறுவனின் தாயே இந்தக் கொலைகளுக்கும், பள்ளிக்கூடத்திற்கு மில்லியன் கணக்கில் ஏற்பட்ட சேதங்களுக்கும் பொறுப்பு என்று சட்டதரனிகள் கூறினர்.
பேடன் ஊர்ட்டம்பெர்கில் உள்ள விண்ணென்டன் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கிம் கிரட்ஷ்மர்(17) ஏற்படுத்திய சேதத்திற்கு 9.3 மில்லியன் யூரோ அவனது தாய் செலுத்த வேண்டும் என்று சட்டதரனிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கியை பத்திரமாக பூட்டி வைக்காதது பெற்றோரின் குற்றமாகும் என்றும் தாய் தன் கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்பட்ட விளைவு 15 பேரின் உயிரை பறித்ததற்கு காரணம் எனவும் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவனது தாய் எரிக் சில்சரின்(Erik Silcher) சட்டதரனிகள் வாதடுகையில், 17 வயதுப் பையனை இரவும் பகலும் கண்காணிப்பது எந்தப் பெற்றோராலும் இயலாத காரியமாகும்.
எனவே தாயை இதற்குப் பொறுப்பாக்க முடியாது என்றும் அதே சமயம் குண்டு காயத்தால் சிகிச்சை பெற்று வருவோருக்கு 8.8 மில்லியன் யூரோ அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக