திங்கள், மே 20, 2013

குஜராத் இன அழிப்பு குற்றவாளி அமித்ஷாவுக்குப் பதவி!

புது டெல்லி: குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இன அழிப்பு வழக்கில் குற்றவாளியான குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சரும் மோடிக்கு நெருக்கமானவருமான அமித்ஷாவுக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.


2002 ஆம் ஆண்டு கோத்ராவில் மர்மமான முறையில் ரயில் பெட்டி எரிந்ததைத் தொடர்ந்து முஸ்லிம்களின்மீது திட்டமிட்ட இன அழிப்பு கலவரம் நடத்தப்பட்டது. இக்கொடூர சம்பவத்திற்கு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த மோடியின் வலதுகை என கருதப்படும் அமித்ஷா முழு ஒத்துழைப்பை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து உள்துறை அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டது.

இதற்கிடையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியினை முன்னிறுத்தும் திட்டத்தில் மோடிக்கு பாஜகவில் நாடாளுமன்ற குழு உறுப்பினராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. மோடியைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளரான, குஜராத் இன அழிப்பு கலவரக்குற்றவாளி அமித்ஷாவுக்கும் கட்சியில் முக்கிய பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி அமித்ஷா, உத்தர பிரதேச மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பினை பாஜக நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் எனத் தெரிகிறது. பாஜகவின் தேசிய அரசியலில் மோடியின் ஆதரவாளர்கள் நுழைக்கப்படுவது கட்சியில் மோடி எதிர்ப்பாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், "கூட்டம் சேர்க்கக்கூடியவரெல்லாம் பிரதமர் வேட்பாளரா?" என மோடிக்கு எதிராக பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான உமாபாரதி கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக