முஸ்லீம்களுக்கு மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீட்டையும், மாநிலத்தில் 7 சதவீத இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) மே 26 அன்று பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் திடலில் சமூக நீதி மாநாட்டை நடத்தியது.
நேற்று (26.05.2013) காலை 10 மணியளவில் மாநாட்டுத் திடலில் மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி கொடியேற்றி வைத்தார். மாலை 3 மணியளவில் பல்லாவரம் கிரீன் மஸ்ஜித் அருகில் தொடங்கிய மாநாட்டின் எழுச்சி பேரணியை மாநில செயலாளர் வி.எம்.ரத்தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாநாட்டிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முகமது பிலால் தலைமையேற்றார். மாநில செயலாளர் அமீர் ஹம்சா வரவேற்றுப்பேசினார். வடசென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ரசீது, பொதுச்செயலாளர் அப்துல் கரீம், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிஹ், பொதுச்செயலாளர் அணீஸ் முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜீம், பொதுச்செயலாளர் இஸ்மாயீல், திருவள்ளுர் மாவட்ட தலைவர் முஹம்மது சலீம், பொதுச்செயலாளர் ஃபிர்தவுஸ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள் மீரான்,அப்துல் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகமது மொய்தீன், யாசர் அரஃபாத், அபுபக்கர், காதர் பாவா, அபுதாஹீர், குத்புதீன், மொய்தீன் ஃபாரூக், பல்லாவரம் அன்சாரி, ஆலந்தூர் தொகுதி தலைவர் ஷேக் தாவூத், தாம்பரம் தொகுதி தலைவர் சதாம் உசேன், சோழிங்கநல்லூர் தொகுதி தலைவர் சாதிக், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி தலைவர் முஹம்மது ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், தமிழக முஸ்லீம் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனிபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக தலைவர் அமானுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி, துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹ்மத், மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் மற்றும் கர்நாடக மாநில தலைவர் கே.எச்.அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியின் இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாநில தலைவர் : கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி உரை :
சமூகத்தின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் பின்தங்கியுள்ளனர். முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டிய அரசுகள் அதற்கான உறுதியான முயற்சிகளை எடுக்கவில்லை. மத்திய சிறுபான்மை அமைச்சகம் சிறுபான்மை மக்களுக்காக ஒதுக்கும் நிதிகளை மாநிலங்கள் முழுமையாக செலவளிப்பதில்லை. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.
மத்திய அரசால் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பது பற்றி தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். வாழ்க்கை தரத்தில் பின்தங்கியுள்ள சமூக மக்களை பிற சமூக மக்களுக்கு இணையாக உயர்த்துவதற்கு இட ஒதுக்கீடு இன்றியமையாதது. அதன் மூலமே தலித்துகளும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் ஓரளவு முன்னேற முடிந்திருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் தற்போது தலித்கள் பழங்குடியின மக்களை விட கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் கீழ் மட்டத்தில் உள்ளனர்.
இதை சச்சார் கமிஷன் போன்ற பல்வேறு கமிஷன்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் இதுவரை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பறிந்துரையின்படி 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். இதற்கான ஏதாவது சட்ட ரீதியான தடைகள் இருப்பின் சட்டத்தின் மூலம் இதை நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் கடந்த தி.மு.க அரசு முஸ்லிம்களுக்கு 3.5
சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கியது. இது போதாது என முஸ்லிம்கள் போராடி வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது தான் மீண்டும் ஆட்சி பொருப்பேற்றால், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்குவேன் என முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி வழங்கினார். அந்த வாக்குறுதி என்ன ஆனது ? தமிழக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய அளவிலான பிரச்சார இயக்கத்தினை நடத்தி வருகின்றது.
இந்தியா முழுவதும் முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் கஷ்டடி யில் கொல்லப்படுவதும் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவதும். தொடர்ந்து வருகிறது. தமிழகத்திலும் பெங்களூரு குண்டுவெடிப்பை காரணம் காட்டி கொடூரமான யூ.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் மோசமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையேன கூறி வருவது கண்டிக்கத்தக்கது. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே எஸ்.டி.பி.ஐ யின் கோரிக்கை. எனவே இந்த வழக்கினை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க
வேண்டும்.
இவ்வாறு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி உரை நிகழ்த்தினார்.
சமூக நீதிமாநாடு – காஞ்சிபுரம் – தீர்மானங்கள் தீர்மானம் :
1.
நமது நாட்டில் முஸ்லிம்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஏனைய பிறசமுதாயத்தை விட மிகவும் கீழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அரசின் அதிகாரப்பூர்வ கமிஷன்களான நீதிபதி ராஜிந்தர்சச்சார், மிஸ்ராகமிஷன்களின் அறிக்கை ஆகும். மேலும் மிஸ்ரா கமிஷன் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் உடனடி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது. ஆனால் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின்பஐ மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும். என்று மத்திய அரசினை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மேலும் தமிழகத்தில் முஸ்லிம்கள் 7 சதவீதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கு இடஒதுக்கீடு தேவையெனில் 7 சதவீதம் பூரண இடஒதுக்கீடு வழங்குவதே நியாமானதாகும். எனவே தமிழக அரசு முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
2.
கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலையானது மிகுந்த சுற்றுப்புற சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கடல்நீரும் கதிர்வீச்சு மிகுந்ததாக மாறி உள்ளது. மேலும், இதனை மூட வேண்டு என்று ஆயிரக்கணக்கான கிராம மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் மக்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அணுஉலையை இயக்கி வருவது கண்டிக்கத்தக்கது. கண்ணை விற்று ஒளியை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை பறித்து சுற்றுப்புற சீர்கேட்டை ஏற்படுத்தி, மனித உயிருக்கு உலை வைக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை உடனடியாக இழுத்து மூட இம்மாநாடு மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.

3.
தமிழக சிறைகளில் 7 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைகைதிகளை அவர்களின் வாழ்நிலை கருதி, ஒரு குற்றவாளிதிருந்த 7 வருடசிறைதண்டனை போதுமானது என்றகாந்தியடிகளின் வாக்குக்கு இணங்க 7 வருடம் சிறையில் கழித்த முஸ்லிம் சிறைகைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மேலும் SLR என்ற அதி தீவிர நோயினால் பாதிக்கப்பட்டு சிறுநீரகங்கள் பாதிப்படைந்து,உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கோவை அபுதாகீர் என்ற சிறைவாசியை நீதிமன்றம் பரோல் உத்தரவிட்டும், தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த செயல் மனிதாபிமானமற்ற செயல் ஆகும். எனவே கருணை அடிப்படையில் கோவை அபுதாகீர் என்ற சிறைவாசியை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
4.
மீனவர்கள் அதிகமாக கொண்ட மாவட்டங்களில் ஒன்று காஞ்சிபுரம். ஆனால் அன்றாடம் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், காரணமின்றி சிறைபிடிக்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது. மேலும், இலங்கை ராணுவத்தினரால் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்படும்போது, அதரனை எதிர்க்கவேண்டிய மத்திய மாநில அரசுகள், கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மீனவர்கள் வாழ்வு மேம்படவும், அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளித்திடவும், மத்திய மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5
மத்திய மாநில அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு யு.ஏ.பி.ஏ என்ற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் என்ற அவசர சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் தடா , பொடா போன்ற கொடிய கறுப்பு சட்டங்களை விட மிகவும் ஆபத்தானதும், அடிப்படை உரிமைகளை பாதிக்க கூடிய சட்டமுமாகும். இச்சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ரௌலட் போன்ற சட்டங்களுக்கு இணையானது. இச்சட்டத்தின்கீழ் இந்தியா முழுவதும் காவல்துறை முஸ்லிம்களை வேட்டையாடி வருவது கண்டிக்கத்தக்கது.

மேலும்,பொய் வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து இச்சட்டத்தின் கீழ் விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறலையும், காவல் துறை நிகழ்த்தி வருகிறது. அரசமைப்புச் சட்டம் இந்திய குடிமகனுக்கு தரும்அடிப்படை உரிமைகளை எப்போதும் அவனுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த கறுப்பு சட்டத்தை வாபஸ் பெற இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. அத்துடன் சமிபத்தில் பெங்களூர் குண்டு வெடிப்பை தொடந்து தமிழக முஸ்லிம் இளைஞர்களை போலியாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .இதை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு.இவ்வழக்கை சி பி ஐ வசம் ஒப்படைத்து உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க இம்மாநாடு கோருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக