வங்கதேச தலைநகர் டாக்கா அருகில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் செயல்பட்டு வந்த 8 மாடி கட்டிடம் ஒன்று கடந்த மாதம் 24-ம் தேதி இடிந்து விழுந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 17-வது நாளாக இன்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது, ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ரேஷ்மி என்ற அந்தப் பெண், கட்டிட இடிபாடுகளில் மிகப்பெரிய தூணுக்கும், பீமுக்கும் இடையில் சிக்கியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.
இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் தண்ணீரை செலுத்தியபோது, அதனை குடித்திருக்கலாம். அல்லது அவர் தண்ணீர் சேமித்து வைத்து குடித்து இத்தனை நாட்களாக உயிர்வாழ்ந்திருக்கலாம் என்று தீயணைப்பு துறை தலைவர் தெரிவித்தார்.
கட்டிட இடிபாடுகளை பிரித்து எடுத்துக் கொண்டிருந்தபோது, ‘யாராவது உயிருடன் இருக்கிறீர்களா?’ என்று கேட்டோம். அப்போது ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி கூறினார். அதன்பின்னர் அவரை இன்று மீட்டிருக்கிறோம் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக