புதன், மே 29, 2013

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ சந்தித்தார் !

  • தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக எம்.எல்.ஏ(சேர்ந்தமங்கலம்) சாந்தி என்பவர் இன்று காலை சந்தித்து பேசினார். தமது தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர் அளித்தார். 
  •  
  • கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அக்கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. சட்டசபையில் இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் மோதிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாமல் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது.
  •  
  • இந்த பரபரபரப்பு அடங்குவதற்குள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை தலைமைச்செயலகத்தில் சந்தித்தார்கள். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபை வைரவிழா வளைவு அடிக்கல் நாட்டுவிழாவில் முதல்வரை சந்தித்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விழாவில் அவர்களுக்கு முதல்வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
  •  
  • அதுமட்டுமல்லாமல் சட்டசபை கூட்டத்திலும் நான்கு பேர்களுக்கும் ஒரேவரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் முதல்வரை சந்தித்த தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும், மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்களும் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக