வெள்ளி, மே 10, 2013

சில நாட்களில் பாமக செய்த பல சாதனை!

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் ஒரு வாரத்தில் 730 அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. 17 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6,300 பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாமக சார்பில் விழுப்புரத்தில் கடந்த 30 ஆம் தேதி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சி நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இதைத் தொடர்ந்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பேருந்தை இயக்கினாலும், ஆங்காங்கு காடுகளில் மறைந்திருந்து திடீரென பேருந்துகள் மீது பெட்ரோல் குண்டுகள், கற்கள் போன்றவை கொண்டு தாக்குவதால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளகியுள்ளனர். பேருந்துப் பயணம் தங்களின் இறுதிப் பயணமாகி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் பேருந்துப் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.3

1 கருத்து:

  1. jana nayagam pesum katchigalin arajagapokku kandikkathakkathu ithe oru muslim iyakkam seydiranthal sollave vendam indha pathirikkaigal payangaravatham muslim payangaravatham islamia payangaravatham ena olamitturippargal

    பதிலளிநீக்கு