வியாழன், மே 09, 2013

புத்த துறவிகள் வன்முறையில் ஈடுபடுவதால் தலாய் லாமா மனக் கவலை!

உலகிலேயே புத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளில் குறிப்பிடத்தக்கது மியான்மர் ஆகும்.ஆயினும், அந்நாட்டின் 60 மில்லியன் மக்கள் தொகையில் 5 சதவிகிதத்தினர் முஸ்லிம் மக்களாவர். முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே தவிர நாட்டின் பல இடங்களிலும் முஸ்லிம் இன மக்கள் பெருவாரியான அளவில் வசித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 20ஆம் தேதியன்று, மேக்திலா என்ற இடத்தில், புத்தமத விற்பனையாளர்களுக்கும், முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு, இனக் கலவரமாக மாறி, 42 பேரின் சாவுக்கும் காரணமாக அமைந்தது.

இது மேலும் 10 நகரங்களுக்கு மேல் பரவியது. 969 இயக்கம் என்று புத்தரின் கோட்பாடுகளைக் குறிக்கும் எண்களைத் தங்கள் இயக்கத்திற்கு வைத்துக் கொண்ட புத்த மதத்தினர், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

மேலும், முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளிலோ, அல்லது அகதிகள் முகாம்களிலோ தஞ்சம் புகுந்துள்ளனர்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வந்த ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, கடந்த 2011ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சீர்திருத்தவாத அரசுக்கு, இந்த இனப் பிரச்சினைகளை அடக்குவது என்பது ஒரு சவாலாகவே இருக்கின்றது.

இந்த கலவரத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். 13 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து புதிய இடங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் புத்தமத குரு தலாய் லாமா மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது :- 

மியான்மரில் நடைபெற்று வரும் கலவரம் அரசியல் ரீதியானது; மத ரீதியானது அல்ல. மியான்மரில் நடைபெற்று வரும் வன்முறைகள் நினைத்து பார்க்க முடியாதது. மிகவும் கவலை அளிக்கக்கூடியது. தற்போது புத்த துறவிகள் மசூதிகள் மீது தாக்குதல் நடத்துவது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

மத மோதல்கள் மற்றும் வன்முறையற்ற புதிய உலகை உருவாக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக