புதன், மே 29, 2013

ஐரோப்பிய யூனியனுக்கு போட்டியாக சிரியாவுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி ஆசாத் படைக்கும் போராளிகள் குழுவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் சிரிய அரச படைக்கு ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அதுபோல் போராளிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இரு தரப்புக்கும் வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிரியாவில் சமநிலை திரும்ப போராளிகள் மீதான ஆயுதத்தடையை நீக்குவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. இதற்கு போட்டியாக, வெளிநாட்டு தலையீட்டை தடுக்க உதவியாக சிரியாவுக்கு தேவையான வான்வழிக் கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் சிரியா போராளிகளின் மீதான ஆயுதத்தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதற்கும் ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக