வெள்ளி, ஜூன் 28, 2013

உத்தர்கண்ட் வெள்ளச் சேதம் : முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி ரூ.78 இலட்சம் நிதியுதவி!

உத்தர்கண்ட் மாநிலத்தை உருக்குலைத்துப் போட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளது அறிந்ததே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு உதவிகளை அரசுகள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும், நிறுவனங்களும் ஏராளமாக வழங்கி வருகின்றன.

முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து திட்டங்களை தயாரிக்கும் காங்கிரஸ், பா.ஜ.க!

புதுடெல்லி: தேர்தல் காலங்களில் கைநிறைய வாக்குறுதிகளுடன் முஸ்லிம் வாக்காளர்களை அணுகும் காங்கிரஸ் கட்சி வழக்கம்போல தனது தந்திரங்களை பிரயோகிக்கும் வேளையில், தங்களிடமிருந்து விலகியிருக்கும் நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை மக்களான முஸ்லிம்களை ஈர்ப்பதற்காக பா.ஜ.கவும் திட்டங்களை வகுத்து வருகிறது.

மாநிலங்களவை தேர்தல்:அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், திமுக வேட்பாளர்கள் வெற்றி! - தேமுதிக தோல்வி!

தமிழக மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 4 பேர், திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். பதிவான வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாமல் போனது.

'டைம்' இதழில் மியான்மர் பயங்கரவாதத்தின் முகம்!

ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் (பர்மா) நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை, இனக்கலவரத்தை முன்னின்று நடத்தும் விராது என்ற புத்தபிக்குவின் முகம் அமெரிக்காவின் 'டைம்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பிட்ட டைம் இதழுக்கு மியான்மர் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாழன், ஜூன் 27, 2013

உத்தரகாண்ட்: மோடி "ராம்போ" கிடையாது! பா.ஜ.க பல்டி!

லக்னோ:உத்தரகண்ட் வெள்ளத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்து 15 ஆயிரம் பேரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றதாக மோடி ஒருபோதும் கூறவில்லை என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இயற்கை சீற்றத்திலும் ஆதாயம் தேட முயலும் மோடிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள்எழுந்துள்ள நிலையில் பா.ஜ.க, மோடி அவ்வாறு கூறவில்லை என்று பல்டியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகிள், ஏர்டெல் கை கோர்த்து மொபைலில் இலவச இன்டெர்நெட்!

செல்ஃபோன் மூலமாக இணைய தளத்தைப் பயன்படுத்தும் வசதியை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை பெருக்க ஏர்டெல் நிறுவனமும், கூகிள் நிறுவனமும் கை கோர்த்துள்ளன.

மாலேகான்:முஸ்லிம்களை குற்றவாளியாக சேர்த்த அதிகாரிகள் மீது பொது நல வழக்கு!

புதுடெல்லி: 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்த அதிகாரிகள் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மறு விசாரணைச் செய்த தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஒரு மாதம் முடியும் வேளையில், இவ்வழக்கில் அநியாயமாக முஸ்லிம் இளைஞர்களை குற்றவாளிகளாக சேர்த்த புலனாய்வு அதிகாரிகள் மீது செய்யது முஸ்தபா அமீன் என்ற நபர் பொது நல மனுவை அளித்துள்ளார்.

புதன், ஜூன் 26, 2013

கத்தார் மன்னர் பதவி விலகினார் : புதிய மன்னரானார் இளவரசர்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் மன்னர் ஷேக் பின் கலிஃபா அல்-தானி (Sheikh Bin Khalifa al-Thani) பதவி விலகியுள்ளார். தலைநகர் தோகாவில் தமது குடும்பத்தினருடன் ஆலோசித்த அவர், ஆட்சிப் பொறுப்பை தமது மகனும் இளவரசருமான ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி (Sheikh Tamim bin Hamad al-Thani)-யிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். 

சித்திரவதை எதிர்ப்பு தினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தர்ணா!

புதுடெல்லி: சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினமான வருகிறது ஜூன் 26-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்தவிருக்கிறது. ’Say no to death penalty’ (மரணத்தண்டனையை ஒழிப்போம்) என்பது இவ்வருட சித்திரவதை எதிர்ப்பு தின பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கமாக இருக்கும் என்று தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் நடக்கும் தர்ணா போராட்டத்தை தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் துவக்கி வைக்கிறார். சிறைகளிலும், போலீஸ் கஸ்டடிகளிலும் நிரபராதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்போம்.போலீஸ்

இஷ்ரத் தாயார் மீது தாக்குதல்:சாட்சிகளை பாதுகாக்க திட்டம் வேண்டும்!-என்.சி.ஹெச்.ஆர்.ஓ கோரிக்கை!

பெங்களூர்: இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கவுஸர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனித உரிமை அமைப்பான என்.சி.ஹெச்.ஆர்.ஓ வன்மையாக கண்டித்துள்ளது. இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேரின் கொலையாளிகளை குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறு என்.சி.ஹெச்.ஆர்.ஓ, சி.பி.ஐக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காட்டுத்தீயால் காற்றில் ஏற்பட்ட மாசு கலப்பினால் மன்னிப்பு கோரிய இந்தோனேசியா ஜனாதிபதி!

இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவுகளில் ஆண்டுதோறும் வறட்சிக் காலத்தில் பனை எண்ணெய்க்காகப் பயிரிடுபவர்கள் நிலத்தை சுத்தம் செய்வதற்காக எரிப்பது வழக்கம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய இச்செயலினை அரசு தடை செய்திருந்த போதிலும் சட்டத்துக்கு விரோதமாக இத்தகைய செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

திங்கள், ஜூன் 24, 2013

2003 முதல் 7 இடங்களில் குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டவன் ஹிந்துத்துவா தீவிரவாதி!-தேசிய புலனாய்வு நிறுவனம்!

புதுடில்லி : 2003-ஆம் ஆண்டிலிருந்து 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக குண்டு வைத்துத் தாக்கியத்தில் மூளையாக இருந்தவன் இந்துத்துவா வெறியன் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

பாஜகாவுக்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எச்சரிக்கை !

  • பாட்னா வந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்திய அரசியலை விட்டே ஐக்கிய ஜனதாதளம் அழிக்கப்படும் என்று கடுமையாக வர்ணித்திருந்தார் ஐக்கிய ஜனதாதளம் கட்சியே கடும் வார்த்தைகளால் தாக்கியுள்ளார் இதற்க்கு பதிலளித்த நிதீஷ் குமார்

கோத்ரா சம்பவம்:விசாரணை நடத்திய நீதிபதி யு.சி.பானர்ஜியை கொலைச் செய்ய முயன்ற ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் எரிபொருளை முஸ்லிம்கள் வெளியே இருந்து ஊற்றவில்லை,ரெயிலுக்கு உள்ளேயிருந்தே ஊற்றப்பட்டுள்ளது என்று கண்டுபிடித்த நீதிபதி யு.சி. பானர்ஜியை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலைச் செய்ய திட்டமிட்டிருந்தான் என்று சாட்சி ஒருவர் கூறியதாக 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கூறுகிறது.

மோடியின் காசுக்கு விலை போகும் பத்திரிக்கைகள்!​

இன்றைய மாலை மலர் இணையதளத்தில்"உத்தரகாண்டில் தவித்த 15,000 குஜராத் பக்தர்கள் மீட்பு" என்ற தலைப்பில் ஒரு செய்தி. உத்தரகாண்ட் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் இராணுவமும் தன்னார்வலர்களும் படாதபாடு பட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் நேரடிக் காட்சிகளாகவே வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரேயடியாக குஜராத்தைச் சேர்ந்த 15,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த இடம் அழைத்து வரப்பட்டதான அச்செய்தி மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது.

சனி, ஜூன் 22, 2013

வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க நீண்ட காலம் பிடிக்கும்! : முதலமைச்சர்

வெள்ளத்தால் உருக்குலைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க நீண்ட காலம் பிடிக்கும் என முதலமைச்சர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார். டேராடூனில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் நீண்ட காலம் ஆகும் என கூறினார்.

அமெரிக்காவின் உளவுக்கு உதவி செய்ததா SKYPE? நியூயார்க் டைம்ஸ் அதிர்ச்சித் தகவல்!

மக்களைக் கண்காணிப்பதற்கு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்புக்கு உதவி செய்யும் வகையில் ரகசிய வசதி ஒன்றை ஸ்கைப் (Skype) வைத்திருந்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தலை புறக்கணித்த பா.ம.க வின் அறிவிப்பால் திமுக அதிர்ச்சி!

மாநிலங்களவை தேர்தலில் திமுகவின் கனிமொழிக்கு ஆதரவு தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருக்கும் ஆதரவு இல்லை என்று பா.ம.க. அறிவித்துவிட்டதால் கனிமொழியின் வெற்றி தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

மலிவு விலை குடிநீர்! அம்மாவின் அடுத்த(து) அதி(ரெ)ரடி!

சென்னை : தமிழகத்தில் மலிவு விலை சிற்றுண்டி, மலிவு விலை காய்கறி திட்டத்தின் தொடர்ச்சியாக மலிவு விலை குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெ., தலைமையிலான அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆரம்ப கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.

காந்தியைக் கொல்வோம்! பரபரப்பினை ஏற்படுத்திய புதிய நூல்!

காந்தியின் கொள்ளுப் பேரன்  துசார் காந்தி எழுதிய காந்தியைக் கொல்லுவோம்  என்கிற நூல் சமீபத்தில்  பரபரப்பினை  உண்டாக்கிய ஒன்று. இந்நூலினை, தான்  எழுதிய காரணம் பற்றி துசார் காந்தி அவர்கள் குறிப்பிடும்பொழுது,  சமீப காலங்களில் இந்துத்துவ  போன்ற  அமைப்புகள் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தினைச் செய்து வருகிறார்கள். காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார்கள். கோட்சேவை ஒரு வீரப்  புருஷனாகச் சித்தரித்து வருகின்றனர்.

பாப்புலர் ஃபிரண்ட்-க்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட 10 நாளிதழ்களுக்கு பிரஸ் கவுன்சில் நோட்டீஸ்!

புது டெல்லி : பாப்புலர் ஃ பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட பத்து நாளிதழ்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொருட்டு வரும் ஜுலை 16 ந்தேதி அன்று விசாரணை குழு முன் ஆஜராகும் படி பிரஸ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளி, ஜூன் 21, 2013

துபாயில் குர்ஆனை விவரிக்கும் பூங்கா விரைவில் திறக்கப்படும்!

துபாய் அரசு தனது நீண்ட நாள் லட்சியமான குர்ஆனின் காட்சிகளை விவரிக்கும் பூங்கா ஒன்றினை அமைக்கும் எண்ணத்தைச் செயல்படுத்தத் துவங்கியுள்ளது. 7.3 மில்லியன் டாலர் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் இந்தப் பூங்காவில் உள்ள தோட்டத்தில், குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இயற்கைத் தாவரங்கள் அனைத்தும் வளர்க்கப்படும்.

ஆர்.எஸ்.எஸ் தலைவருடனான சந்திப்பை புறக்கணித்த அத்வானி!

புதுடெல்லி:பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரக் கமிட்டி தலைவராக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி நியமிக்கப்பட்டதில் கடுமையான அதிருப்திஅடைந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்திப்பதை ரத்துச் செய்துள்ளார்.

அமெரிக்க அறிவிப்பினால், ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் வெளியிட்டத் தகவலால், இன்று சர்வதேச அளவில் பல நாட்டு பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகளும் இன்று பெரும் சரிவு கண்டன.

ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்ய மின்னணு மோதிரம் அறிமுகம்!

ஸ்மார்ட்போன்களை அன்லாக் (Unlock) செய்வதற்குப் பயன்படும் மின்னணு மோதிரம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஷாண்டா (Shanda) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோதிரத்தை அணிந்து கொள்வதன் மூலம், ஸ்மார்ட்போன்களை பாஸ்வேர்ட் மூலம் அன்லாக் (Unlock) செய்வதற்குப் பதிலாக, மோதிரத்தை அருகில் கொண்டு சென்று அழுத்துவதன் மூலம் அன்லாக் (Unlock) செய்ய முடியும். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் இந்த மோதிரம் இப்போதைக்கு செயல்படும்.

அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை குறைக்கவேண்டும் -ஒபாமா!

பெர்லின்: ரஷியா சம்மதித்தால் அணு ஆயுதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். ஜெர்மனி சென்றுள்ள ஒபாமா அங்குள்ள ஜெர்மனியை இரண்டாக பிரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண்டன்பர்க் கேட் பகுதியில் அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாக உலக நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது. இன்றைய சூழ்நிலையில் நாம் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் உண்மை.

இந்தோனேசியா காட்டுத் தீ புகையால் சிங்கப்பூர் நகர மக்கள் பாதிப்பு!

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் கடந்த ஒரு வார காலமாக எரிந்து வரும் காட்டுத் தீக்கு சிங்கப்பூர் நகரம் புகையால் சூழப்பட்டுள்ளது. இதனால் காற்று மண்டலம் மாசு அடைந்து அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோத காட்டுத் தீ  என சிங்கப்பூர் கருதுவதினால் இந்த  இரு நாடுகளிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

வியாழன், ஜூன் 20, 2013

மாநிலங்களவைத் தேர்தல் -திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு ஏன்?

மாநிலங்களவைத் தேர்தல் - திமுகவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை சந்தித்து ம.ம.க. நிர்வாகிகள் ஆதரவைத் தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் வரும் ஜூன் 27 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.

யாகூவிடம் தகவல் கேட்கும் அமெரிக்கா!

தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாரிசா மேயர் வெளியிட்டுள்ள கடிதத்தில் இத்தகைய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது மகளின் கொலையால் யாருக்கு லாபம்? – இஷ்ரத்தின் தாயார் கேள்வி!

அஹ்மதாபாத்: ஒரு முஸ்லிம் இளம்பெண்ணை கொலைச் செய்துவிட்டு யார் லாபம் அடைந்தார்கள்? ஏன் எனது மகளை கொலைச் செய்தார்கள்? கேள்வி கேட்பது குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொலைச் செய்யப்பட்ட இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கவுஸர். நேற்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் அவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பீகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி!

பாஜக கூட்டணி விலகலையடுத்து பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது. 17 ஆண்டுகளாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் இருந்து விலகியது.

புதன், ஜூன் 19, 2013

பீகாரில் பா.ஜனதா வன்முறை வெறியாட்டம்!

பா.ஜனதா  கூட்டணியிலிருந்து ஐ.ஜனதா தளம் வெளியேறியதையடுத்து முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகக் கோரி பாஜக சார்பில் முழு அடைப்பு நடந்து வருகிறது. பாட்னாவில் பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசிய தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவன்!

இந்துத்துவாவின் மூலமாகவே நாட்டை முன்னேற்ற பாதைக்கு மாற்றமுடியும் என பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவன் மோகன்பகவத் கூறியுள்ளான்.  மீரட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பயங்கவாதி மோகன்பகவத்,  யாருக்கும் பிடித்தாலும், யாருக்கு பிடிக்கா விட்டாலும் இந்துத்துவா ஒன்று தான் ஒரேவழி என்று இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசியுள்ளான்

செவ்வாய், ஜூன் 18, 2013

ஹஜ் புனித பயணிகளுக்கு சவூதி அரசு வேண்டுகோள்!

ரியாத்:ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் புனித பயணிகள் தங்களுடைய பயணத்தை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்தி வைக்குமாறு சவூதி அரேபியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிநாடுகளுடன் உறவை மேம்படுத்துவதே முக்கிய நோக்கம்! - ஈரானின் புதிய அதிபர் ரூஹானி!

வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்துவதும், பொருளாதார நிலைமையை சீர்செய்வதுமே முக்கிய நோக்கம் என்று ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை ஏமாற்ற ஜூன் 23-இல் பா.ஜ.க நடத்தும் மாநாடு!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை, பாபரி மஸ்ஜித் இடிப்பு என்று முஸ்லிம்களின் உயிர், உடைமைகள், வழிப்பாட்டுத்தலங்களை அழித்து தொடர்ந்து அவர்களுக்கு எதிராக சதித்திட்டங்களை அரங்கேற்றி வரும் பாசிஸ்டுகளின் பாசறையில் உருவான அரசியல் கட்சி பா.ஜ.க. இக்கட்சி தேர்தல் நேரங்களில் முஸ்லிம்களை ஏமாற்ற முயற்சிப்பது வழக்கம். அவ்வகையில் வருகிற மக்களவை தேர்தல் மற்றும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி டெல்லியில் ஜூன் 23-ஆம் தேதி முஸ்லிம் மாநாட்டை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாம். இத்தகவலை பா.ஜ.கவில் முஸ்லிம் பெயர் தாங்கியான ஷாநவாஸ் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் கனவு நிறைவேறாது!- உமர் அப்துல்லாஹ்!

ஸ்ரீநகர்:பா.ஜ.க. ஒவ்வொரு கூட்டணி கட்சியாக இழந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாக அமர வேண்டும் என பா.ஜ.க.வின் கனவு நிறைவேறாது என காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

விசாரணை முடிவடைந்த குண்டுவெடிப்புகளுக்கான பொறுப்பையும் இந்தியன் முஜாஹீன் ஏற்றது!-குலைல் நியூஸின் புலனாய்வு!

புதுடெல்லி: நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்குகளில் சிக்கவைப்பதற்கான உ.பி போலீசின் அவசரகதியான நடவடிக்கைகளில் ஏற்பட்ட அபத்தங்கள் ஏராளம். ஆஷிஷ் கேதானை எடிட்டராக கொண்டு இயங்கும் குலைல் நியூஸ் இணையதளம் வெளியிட்டுள்ள இது தொடர்பான போலீஸ் விசாரணை அறிக்கைகள் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளன.

திங்கள், ஜூன் 17, 2013

பாப்புலர் ஃபிரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் கலந்துகொண்ட மலேசியாவில் நடைபெற்ற "இஸ்லாத்திற்கு எதிரான சதியும்! முஸ்லிம்களின் நிலையும்! கருத்தரங்கம்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (16/06/13) "இஸ்லாத்திற்கு எதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் குழந்தை உட்பட பல குற்றங்கள் 60.1 சதவீதம் தேசிய குற்ற ஆவண தகவல்!

கடந்த 2012ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக மட்டும் 38,172 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.

உறவை முறித்தது ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டு பா.ஜனதா கூட்டணி உடைந்தது !

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ , ஐக்கிய ஜனதா தளம் இடையே கடந்த 17 ஆண்டுகளாக இருந்து வந்த கூட்டணி நேற்று முறிந்தது. 

சனி, ஜூன் 15, 2013

தமிழகம் முழுவதும் நடைபெற்ற SDPI கட்சியின் தந்தி அனுப்பும் போராட்டம!

யுஏபிஏ சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)சார்பில் இன்று (13.06.2013) பிரதமர் அவர்களுக்கு தந்தி அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இந்தியாவின் முதல் அதிகாரபூர்வ பாசிஸ்ட் நரேந்திர மோடி : ஜெய்ராம் ரமேஷ்

புது டெல்லி : இந்தியாவின் முதல் அதிகாரபூர்வ பாசிஸ்ட்டான நரேந்திர மோடி காங்கிரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சவாலாக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

நரேந்திர மோடிக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் - எல்.கே அத்வானி!

புதுடெல்லி: பிரதம வேட்பாளராக அறிவிக்க நரேந்திர மோடிக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்று எல்.கே அத்வானி கூறியுள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் அரசு பா.ஜ.க வுடனான கூட்டணி முறிவு அறிவிப்பை நாளை நிதிஷ்குமார் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனால் பாரதீய ஜனதா இல்லாமல் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த கூட்டணி முறிவதை பாரதீய ஜனதா தலைவர்கள் விரும்ப வில்லை. இதையடுத்து பாரதீய ஜனதா தலைவர்கள் நிதிஷ்குமாருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்   அத்வானி நிதிஷ்குமாருடன் தொடர்பு கொண்டு "நரேந்திர மோடி பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராகத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வில்லை" என்பதை எடுத்துக் கூறினார். அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கட்சி

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:வெடிக்குண்டுகளை ரெயில்வே பயணிகள் ஓய்வறையில் தயார் செய்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

புதுடெல்லி: 68 அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டுகளை ரெயில்வே பயணிகள்ஓய்வறையில்(Dormitory) வைத்து தயார் செய்துள்ளனர்.இத்தகவலை நேற்று முன் தினம் தேசிய புலனாய்வு ஏஜன்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

வியாழன், ஜூன் 13, 2013

கல்வி, சுகாதாரத்தின் மிகவும் பின் தங்கிய நிலையில் குஜராத்!

புதுடெல்லி:நரேந்திரமோடியின் குஜராத் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் மிகவும் பின் தங்கியுள்ளதாக திட்டக்கமிஷனின் செயல் அறிக்கை கூறுகிறது.குஜராத் மாடல் வளர்ச்சி இந்தியாவுக்கு தேவை என்று மோடியின் ஆதரவாளர்கள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

என்.டி.ஏவுக்கு மூடு விழா? புதிய கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம் அச்சாரம்!

புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரச்சாரக் கமிட்டி தலைவர் பதவி வழங்கப்பட்டதை கண்டித்துபா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி எழுப்பிய சவால், அக்கட்சியை ஆட்டம் காணவைத்தது. இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில் வெளியேறி புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடத்துவங்கியுள்ளது. இதனால் என்.டி.ஏ கலகலத்துப்போகும் என கருதப்படுகிறது.  ஏற்கனவே மோடியுடன் மோதலை கடைப்பிடித்து வந்த ஐக்கிய ஜனதா தளம், 17 ஆண்டுகள் பா.ஜ.க உடனான உறவை முறிக்க முடிவுச் செய்துள்ளது. 20 மக்களவை உறுப்பினர்களை கொண்ட என்.டி.ஏவில் முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை விட்டு விலகியது பா.ஜ.கவின் கனவுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளுக்கு இஸ்ரேல் ஆயுத விற்பனை?

பாகிஸ்தானுக்கு அதி நவீன ராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் வழங்கி வருவதாக பிரிட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த ஆயுத விநியோகம் நடந்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரீஸ் செய்தி நிறுவனம் மூடல்! : செய்தி நிறுவனமே செய்தியானது!

கிரீஸ் நாட்டில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. செய்தி வாசித்துக் கொண்டிருந்தபோதே ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையால் சுமார் 2,700 பேருக்கு உடனடியாக வேலை பறிபோனது. கீரிஸ் நாட்டின் தேசிய தொலைக்காட்சி நிறுவனமான ஈ.ஆர்.டி (ERT) நிறுவனத்தின்

கருத்து மோதலினால் கொரிய நாடுகளின் பேச்சு வார்த்தை முயற்சி தோல்வி!

தென் கொரியாவுடன் நல்லுறவை காக்க வட கொரியா அக்கறை காட்ட வேண்டும் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. சரிசமமான அதிகாரிகளை பேச்சு வார்த்தைக்கு நியமிப்பதில் இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கொரிய நாடுகளுக்கிடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும், நாளையும் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னிற்கு நெருங்கிய மூத்த அதிகாரி தென் கொரியாவிற்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு அதிகாரி வருவார் என அறிவிக்கப்பட்டது.