வியாழன், ஜூன் 27, 2013

உத்தரகாண்ட்: மோடி "ராம்போ" கிடையாது! பா.ஜ.க பல்டி!

லக்னோ:உத்தரகண்ட் வெள்ளத்தில் இருந்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்து 15 ஆயிரம் பேரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றதாக மோடி ஒருபோதும் கூறவில்லை என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இயற்கை சீற்றத்திலும் ஆதாயம் தேட முயலும் மோடிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள்எழுந்துள்ள நிலையில் பா.ஜ.க, மோடி அவ்வாறு கூறவில்லை என்று பல்டியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உத்தரகண்ட் மாநிலத்துக்குச் சென்ற மோடி, தனது மாநில மக்கள் 15 ஆயிரம் பேரை ஒரே நாளில் மீட்டு அழைத்துச் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மோடி இவ்வாறு செய்திகளை வெளியிட்டு தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறியது: உத்தரகண்ட் மாநிலத்தில் இயற்கைச் சீற்றத்தால் பேரழிவு ஏற்பட்டதை அடுத்து, அங்கு சிக்கியுள்ள மக்களுக்கு உதவும் நோக்குடன் தனது பங்களிப்பைச் செலுத்தவே மோடி சென்றார். 15 ஆயிரம் பேரை மீட்டதாக அவர் எப்போதும் கூறவில்லை. இது தொடர்பாக நான் மோடியிடம் பேசினேன். அவரும் இதைத்தான் தெரிவித்தார் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக